வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்!

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டி பட்டானீச்சூர் பகுதியினை அண்மித்த சமயத்தில், முச்சக்கரவண்டியினை பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன், முச்சக்கரவண்டி முன்பாக மோட்டார் சைக்கிளினை நிறுத்தி சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டியின் சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார், சி.சி.ரி.வி. காணொளியின் உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts