பிரதமர் – ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் -த.தே.கூ

வரவு செலவு திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு நாளைய தினம் பிரதமருடனும் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.

அத்துடன் எமக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுதியான நகர்வுகளை கையாளாவிட்டால் கூட்டமைப்பின் தீர்மானமும் காத்திரமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Related Posts