Ad Widget

உலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.போப்ஸ் இதழ் வருடாந்தம் வெளியிடும் உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலிலேயே இவர் முதலிடத்தில் உள்ளார்.

bill-gates

உலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலை போப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில், பேஸ்புக்ஸ் நிறுவுனர் மாக் ஜூக்கர்பேக் முதல் 20 இடத்துக்குள் வந்துள்ளார்.

அத்துடன், கூடைப்பந்தாட்ட நட்சத்திர விளையாட்டு வீரர் மைக்கல் ஜோடன் இந்த பட்டியலில் முதல் தடவையாக நுழைந்துள்ளார்.

16ஆவது தடவையாக இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள, மைக்றோ சொப்ட் நிறுவனத்தின் பங்கு நிறுவனரான பில்கேட்ஸின் வருமானம் 79.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

மெக்ஸிக்கோவின் தொலைதொடர்பு முன்னிலை தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு 77.1 பில்லியன் வருமானத்தை பெறுவதுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

72.7 பில்லியன் டொலர் வருமானத்தை பெறும் பேக்ஸ்யர் ஹதவே கூட்டுத்தாபன தலைவர் வறன் புவே முன்றாம் இடத்தில உள்ளார்.

இந்திரெக்ஸ் நிறுவன ஸ்தாபகர் அமன்ஸியோ ஒட்டகா நான்காம் இடத்தை பிடித்துள்ளார் (64.5 பில்லியன் டொலர்).

ஏறக்கின் கோப்பறேஸன் தலைவர் லறி எலிஸன் ஐந்தாவது இடத்திலுள்ளார்.

போப்ஸ் சஞ்சிகை கடந்த வருடம் 1,645 பில்லியனர்களை இனங்கண்டதுடன் இவ்வருடம் 1,826 பில்லியனர்களை பட்டியலிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

top-ten-rich-list

Related Posts