Ad Widget

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

இலங்கையில் பிறந்த அனைவரும் இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5 இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் எனவும் இலங்கையில் 10 மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும்.

இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தை பெறவேண்டும்.

இதேவேளை இவர்களுக்கான விசா கட்டணம் 2.5 மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts