அரசாங்கத்தினதும் எதிர்கட்சியினதும் ஜோதிடம் என் கையில் உள்ளது. நேற்று ஒரு பெரிய கிரகத்துடன் சிறு சிறு கிரகங்கள் மாறியுள்ளன.அரசாங்கத்திற்கு மயக்கம் வரும் கிரகமாற்றம் எதிர்காலத்தில்தான் நிகழும். அரசாங்கத்தின் பிரபல கிரகம் ஜனாதிபதியால் கிரக மாற்றத்தை தடுக்க முடியும். ஆனால் சுற்றியுள்ள பலனற்ற கிரகம் அதற்கு இடமளிக்காது. என்றாவது எமது பிரபல கிரகத்தை பலனற்ற கிரகங்கள் சேர்ந்து அழிக்கும்’ என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார் என லங்கா நியுஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
மேர்வின் சில்வா மேலும் தெரிவிக்கையில், ‘என்னுடைய மகனை நிரபராதி சிறையில் அடைத்துள்ளனர். எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. இப்படி சென்றால் எனக்கும் தீர்மானம் எடுக்க வேண்டிவரும். ஆனால் நான் இதனை விட்டு போக மாட்டேன். சிறை, விளக்கமறியல் எனக்கு பழக்கப்பட்ட விடயம். அடுத்த வருடம் எனக்கு 72 வயது. ஓன்றை நினைவில் வைத்துக் கொள்ளவும் ஜே.ஆர். வெற்றிபெற்றது 72இல்.’ என்றார். என அவ் இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது