யுவதியை காணவில்லையென முறைப்பாடு

missing personவல்வெட்டித்துறை சீருவில் பகுதியினைச் சேர்ந்த மோனதாஸ் திசாந்தினி (19) என்ற யுவதியைக் காணவில்லையென அவரது தாய் புதன்கிழமை (18) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை நகரத்திலுள்ள ஆடைகள் விற்பனையகத்தில் பணியாற்றும் மேற்படி யுவதி, புதன்கிழமை (18) காலையில் பணிக்குச் சென்ற நிலையில் இரவு 8 மணியாகியும் வீடு திரும்பாததையடுத்தே தாயார் முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts