சீனாவின் விமான உற்பத்தி நிறுவனமான COMAC தயாரித்துள்ள புதிய CE-25A மின்சார பயணிகள் விமானம், கடந்த 15ஆம் திகதி சீனாவின் பின்ஜோ (Binzhou) நகரில் தனது முதலாவது விமானப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

19 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானம், ஒருமுறை மின்னேற்றம் செய்வதன் மூலம் சுமார் 499 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்கக்கூடியது.
அத்துடன், விமானம் இயக்கப்படும்போது நேரடி வெளியேற்றங்கள் எதுவும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய விமானங்களுடன் ஒப்பிடுகையில், CE-25A விமானத்தின் இயக்கச் செலவை 70 சதவீதம் வரை குறைக்க முடியும் என COMAC நிறுவனம் தெரிவித்துள்ளது.