குளிர்சாதனப் பெட்டி சைபர் தாக்குதல் – ஈரான் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு!

பிரான்ஸிலுள்ள நூற்றுக்கணக்கான சிறப்பங்காடிகளில் இருந்த குளிர்பாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களைப் (Fridges and Freezers) இலக்கு வைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஈரானே இருப்பதாகப் பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் (Jean-Noël Barrot), இந்த நடவடிக்கைக்காக ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய சைபர் பிரிவின் தலைவர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகப் பாரிஸ் சட்டத்தரணிகள் தனித்தனியாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற இந்தச் சைபர் தாக்குதலின் போது, சிறப்பங்காடிகளில் இருந்த குளிர்பாதனப் பெட்டிகளின் வெப்பநிலை திடீரென அதிகரிக்கப்பட்டதால், அவற்றில் வைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான யூரோக்கள் மதிப்பிலான புதிய மற்றும் உறைவிக்கப்பட்ட உணவுகள் பழுதடைந்தன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஈரான் இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை

Related Posts