இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) வேலைவாய்ப்பு!!

இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) காலியாகவுள்ள திறந்த போட்டி மூலமான நியமனங்களுக்காகத் தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வெற்றிடமாகவுள்ள பதவி நிலைகள் மற்றும் அவற்றின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

1. முகாமைத்துவ உதவியாளர் – தரம் III (Management Assistant – Grade III)

  • வெற்றிடங்கள்: 55

  • வயது எல்லை: 21 – 35 வயதிற்குட்பட்டவர்கள்

  • ஆரம்ப மாதாந்த ஊதியம்: ரூ. 46,220/-

  • அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், மொழி உட்பட 4 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் (ஒரு அமர்வில்) சித்தியடைந்திருத்தல்.

  • மேலதிக விபரங்கள் & விண்ணப்பப் படிவம்: Management Assistant Vacancy Details

2. அலுவலகப் உதவியாளர் – தரம் III (Office Employee Assistant – Grade III)

  • வெற்றிடங்கள்: 85

  • வயது எல்லை: 21 – 32 வயதிற்குட்பட்டவர்கள்

  • ஆரம்ப மாதாந்த ஊதியம்: ரூ. 40,500/-

  • அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 2 திறமைச் சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

  • மேலதிக விபரங்கள் & விண்ணப்பப் படிவம்: Office Employee Assistant Vacancy Details

3. ஓட்டுநர் / சாரதி – தரம் III (Driver – Grade III)

  • வெற்றிடங்கள்: 46

  • வயது எல்லை: 25 – 45 வயதிற்குட்பட்டவர்கள்

  • ஆரம்ப மாதாந்த ஊதியம்: ரூ. 43,280/-

  • அடிப்படைத் தகைமை: க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 2 திறமைச் சித்திகளுடன் (மொழி உட்பட) 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல், கனரக வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் கொண்டிருத்தல் மற்றும் 3 வருட அனுபவம்.

  • மேலதிக விபரங்கள் & விண்ணப்பப் படிவம்: Driver Recruitment Details

Related Posts