சவூதி அரேபியாவில் இரு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் பகுதிக்குள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட நிலையிலேயே இருவருக்கும் இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதி உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் நஸீருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சிட்டி அக்தர் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.