செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!!

செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று காலை 9 மணி அளவில் நேரில் சென்று பார்வையிடவுள்ளனர்.

இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நியாயமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபடத் தயாராகி வருகிறது.

நீண்டகாலமாகப் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் மூலம் மட்டுமே நீதி கிடைக்கும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பிரதிநிதிகள் மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள நிலையில் பொலிஸார் பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் இந்த விஜயமும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள போராட்டமும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசத்தின் கவனத்தை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts