தாடியால் வாகன ஊர்தியை இழுத்து முதியவர் உலக சாதனை!!

7நிமிடம் 48செக்கன்களில், 1550கிலோகிராம் எடை கொண்ட வாகன ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி,ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Related Posts