எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்: நீங்கள் வெளியேறுங்கள் – இராணுவத் தளபதிக்கு சிவாஜி பதில்

“நீங்கள் வெளியேறுங்கள் எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்கள் இடம்பெறவில்லையென்ற இராணுவத் தளபதியின் கருத்து தொடர்பாக, புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.தீவிரவாத அமைப்புடன் இணைந்து மூன்று இலங்கையர்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர்கள், அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும் சுமார் 40 இலட்சம் ரூபாய் பணம் குறித்தும் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. அண்மையில்... Read more »

யாழ்ப்பாணத்திலும் கால்வைத்த ஐ.எஸ் பயங்கரவாதிகள்!! உண்மை அம்பலமானது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் தளம் ஐ.எஸ் பயங்கரவாதிகளினுடையது என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அண்மையில் யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதி மற்றும் நாவாந்துறைப் பகுதி ஆகியன பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சோதனைக்கு உள்ளாகின. இதன்போது ஒஸ்மானியாக் கல்லூரி வீதியிலுள்ள முஸ்லிம்... Read more »

வைத்தியசாலைகளின் அசமந்தத்தால் தொடரும் உயிர் இழப்புக்கள்!!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவரே தனது... Read more »

குண்டு வெடிப்பு சத்தத்தால் மூளாய் பகுதியில் பதட்டம்!

யாழ்.மூளாய் பகுதியில் நேற்று மாலை 6.00 மணிக்கு இரண்டு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. அதனுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது. அதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்து வீதியில் கூடி அது தொடர்பில் ஆராய்ந்த போது,மீண்டும் ஒரு பெரிய... Read more »

யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று (புதன்கிழமை) காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார்,... Read more »

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை வாளால் வெட்டிய நபர்கள்!!

பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியை வாளால் வெட்டி, சங்கிலி அறுக்க முயன்ற நபர்களால், பாடசாலை மாணவர்கள் சிதறி ஓடினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நடந்துள்ளது. பாடசாலைக்குப் பணிக்குச் சென்ற ஆசிரியை ஒருவரை வழி மறித்த இருவர், ஆசிரியையின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். ஆசிரியர்... Read more »

கொக்குவிலில் வீடு முற்றுகை; வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டனர். அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சுற்றிவளைப்பு இன்று புதன்கிழமை காலை... Read more »

பல்கலைக்கழக வளாக முன்றலில் மாணவர்கள் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில்... Read more »

யாழ் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் பெண் கைது!

சந்தேகத்திற்கு இடமான இலத்திரனியல் பொருள்களுடன் ஜெர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். அத்துடன் அவரது... Read more »

பருத்தித்துறையில் இராணுவச் சீருடைகளுக்கு இணையான ஆடைகள், 11 வர்த்தகர்கள் கைது!

பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவச் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் நேற்று (14.05.19)... Read more »

காணாமல் போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

கடந்த காலங்களில் காணாமல் போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்பு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார். இந்த தகவலை கிழக்கு மாகாண இராணுவக்... Read more »

83 ஜூலை அரச பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை

ஊரடங்கு வேளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதத்தை ஞாபகப்படுத்துவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைய... Read more »

முல்லைத்தீவில் குடியேறிய சிங்கள மக்களுக்கு வீட்டுத்திட்டம்!

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் குடியேறிய சிங்கள மக்களுக்கு அவ்விடத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கள மக்கள்,நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தல் ஈடுபட்ட மக்கள், 1934 ஆம் ஆண்டு முதல் தங்களுடைய மூதாதையர்கள் இங்கு வந்து... Read more »

வடமாகாண பாதுகாப்பிற்கு 10 வாகனங்கள்:ஆளுநர்

நாட்டின் தற்போதைய அவசரகால நிலைமையினைக் கருத்திற் கொண்டு வடமாகாணத்தின் பொலிசாருக்கு அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு 10 வாகனங்களை தற்காலிகமாக வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோவுடன் இன்று காலை இடம்பெற்ற... Read more »

வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம்- ஐ.நா. எச்சரிக்கை

இலங்கையில் காணப்படும் தற்போதைய நிலவரத்தை உரியமுறையில் கையாளவிட்டால் தற்போதைய வன்முறைகள் மேலும் தீவிரமடையலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் சிறுபான்மை மதத்தவர்களிற்கு எதிராக இடம்பெறும் தாக்குதல்கள் குறித்தும் ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலையை தடுப்பதற்கான ஐ.நா.வின் விசேட ஆலோசகர் அடமா டைங் மற்றும்... Read more »

தமிழர் இனப்படுகொலை தினம் யாழில் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில குறித்த நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி... Read more »

நாமல் குமார மற்றும் அமித் வீரசிங்க கைது!

நேற்றும் நேற்று முன்தினமும் நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குழப்பநிலைமைகள் தொடர்பாக, ஊழல் எதிர்ப்பு செயலணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார மற்றும் மஹாசோன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக, காவற்துறை... Read more »

வன்செயல்களை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை! – கூட்டமைப்பு

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்குள்ளாவது குறித்து கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்ட நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது.... Read more »

யாழ் போதனா வைத்தியசாலையில் நான்கு மாதக் குழந்தைக்கு மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தாளர்!!

நான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது. கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை... Read more »