ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம்

கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்டோர கேஸ் நிறுவனமும் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 3,990 ரூபா. 05 கிலோ சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,602 ரூபா....
Ad Widget

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு – அரசாங்கம்

உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மக்களின் நலன் கருதி மிகக் குறைந்த அளவிலேயே விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள பின்னணியில், இலங்கையிலும்...

யாழ். பள்ளிவாசலுக்குள் வாளுடன் புகுந்த நபர்

நேற்றிரவு (09) யாழில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெறும் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்றையதினம் தொழுகை இடம்பெற்றது. இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை...

மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அதிகரிக்கும் வெப்பம்!

மேல், சப்ரகமுவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் 'அவதானிப்பு செலுத்த வேண்டிய' மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதோ அல்லது செயற்பாடுகளில் ஈடுபடுவதோ சோர்வு நிலையை ஏற்படுத்தக்கூடும்...

எரிபொருள் விலை அதிகரிப்பு!!

09ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 22 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 303 ஆகும். சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை ரூ. 24 ஆல் அதிகரிக்க...

கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : சந்தேகநபர் கைது!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நயினாதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த...

கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு, 8 மணி நேரம் கழித்து உதவ வந்த மருதங்கேணி பொலிஸார்!

வடமராட்சி கிழக்கு மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நள்ளிரவில் நகை கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று அதிகாலை 1:00 மணியளவில் மதிலால் பாய்ந்து 3 திருடர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த கணவனை தாக்கிவிட்டு பின்னர் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி...

குருநகரில் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர்...

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்!!

காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில்...

யாழில் மீண்டும் QR ?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எரிபொருளுக்கு QR நடைமுறையினை பின்பற்ற வலு சக்தி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியுள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார். வட மாகாண அதிபர் சங்கத்தினர் புதன்கிழமை மாவட்ட செயலரை சந்தித்து, எரிபொருள் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் நீண்ட வரிசைகள் மற்றும் ஒழுங்கின்மை ஆகியவற்றால் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் , எரிபொருள் பெறுவதற்கு...

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவ அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!

வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற் தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் சக...

யாழில் கடந்த நான்கு நாட்களில் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொள்வனவு

யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். குறித்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய் கிழமை தவிர்ந்த ஏனைய...

வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு

தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின்...

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி நியமனம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வரும் அவர் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுகிறார். அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார். அத்துடன் துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல்...

யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி...

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகள் நிறுத்தம்!!

மண்டைதீவு பகுதியில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் மைதான மற்றும் விளையாட்டு வளாகம் நிர்மாணப் பணிகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. 48 ஏக்கர் பகுதியை உள்ளடக்கிய இந்த திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வரவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அனுமதியின்றி நிலத்தை சமப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ லங்கா...

36 வருடங்களாக ஆலயத்திற்கு செல்ல அனுமதி கோரி காத்திருக்கும் மக்கள்!

மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய பின்னர் அப்பகுதிகள்...

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!!

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன. மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில்...
Loading posts...

All posts loaded

No more posts