கரவெட்டியில் மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தந்தை!!

மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் பாக்கியராஜா (வயது – 63) என்பவரே தனது உயிரை மாய்த்தார். தந்தையில் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது... Read more »

தமிழ் மக்கள் மாற்று அரசியலை ஏற்றுக்கொள்வதில்லை – சட்டத்தரணி குமரகுருபரன்

தமிழ் மக்கள் மாற்று அரசியலை இலகுவாக ஏற்றுக்கொள்வதில்லை எனவும் கடந்து காலங்களில் மாற்று அரசியலை மேற்கொண்டவர்கள் உடனடியாக தமிழ் மக்களினால் துாக்கி வீசியெறியப்பட்டமையை வரலாற்றில் காணக்கூடியதாக இருப்பதாகவும் சட்டத்தரணி குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிய அரசியல் தீர்மானம்... Read more »

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வியமைச்சர் விசேட அறிவிப்பு!

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமானது என்ற சுற்றறிக்கையை இரத்து செய்வது தொடர்பில் அவதானம் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நுகேகொட அநுல வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்... Read more »

விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற தயாராக இல்லை – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக அவருடன் இணைந்து பணியாற்றி நாங்கள் தயாராக இல்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து... Read more »

அரசியல் கைதிகளை விடுதலை: அரசின் இழுத்தடிப்பால் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளது – சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் ஏன் இழுத்தடிப்புகளை செய்து வருகின்றது என தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இவ்வாறான செயற்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தில் மனித நேயம் கேள்விக் குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின்... Read more »

கருணா, கே.பி.க்கு சுகபோகம்..! அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு!

கருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சிறு சிறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின்... Read more »

விக்னேஸ்வரனின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் – மஹிந்த

சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதேநேரம், இனவாதக் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்... Read more »

வட்டுக்கோட்டையில் பயங்கரம்! கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை, மகள் வைத்தியசாலையில்!!

வட்டுக்கோட்டையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தந்தை மற்றும் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை அராலி வடக்கு செட்டியாமடம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர். இதன் போது , கொள்ளையர்கள் அவர்கள் இருவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி... Read more »

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஏற்படும் அதிகரிப்பு அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்று நாட்டில் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.... Read more »

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பித்தேன்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

கூட்டமைப்பின் கட்டாயத்தாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் நேற்று (புதன்கிழமை) தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக்... Read more »

ஆவா குழு தொடர்பாக ஆளுநரின் கருத்தில் சந்தேகம்: சி.வி.விக்னேஸ்வரன்

ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை 3 மாதங்களுக்குள் ஒழிக்க முடியும் என ஆளுநர் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாக வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை நேற்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைக்... Read more »

வத்தளையில் தமிழ் மொழி மூல பாடசாலையை நிர்மாணிக்க அனுமதி!

கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பிரதேசத்தில் தமிழ் மொழிமூல பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. களனி கல்வி வலயத்திற்குட்பட்டதாக அருள் மாணிக்கவாசகம் இந்து பாடசாலை எனும் பெயரில் இந்த தமிழ் மொழிமூல பாடசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச மொழிகள்... Read more »

வடபகுதியின் முதலமைச்சராக பணிபுரிந்துவருவது பலருக்கு இடைஞ்சல் – முதலமைச்சர்

காரைநகர் பிரதேசசபையின் கசூரினா சுற்றுலாமையத்தில் முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகக் கட்டடதிறப்புவிழா கசூரினா சுற்றுலா மையம்இ காரைநகர் 24.10.2018 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பிரதம அதிதியூரை குருர் ப்ரம்மா …………………. இன்றைய நிகழ்வின்... Read more »

என்னை பழிவாங்குவதாக நினைத்து தமிழினத்தை பழிவாங்கி விடாதீர்கள்- முதலமைச்சர் உரை!

தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு... Read more »

வடக்கு மாகாண சபை கீதத்திற்கு அங்கீகாரம்!

வடக்கு மாகாணசபை கீதம் உருவாக்கப்பட்டு சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய இறுதி அமர்வில் குறித்த கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பமான வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களைக் கொண்ட ஆட்சிக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதன் இறுதி அமர்வு... Read more »

தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி விலகும் விவகாரம்: சபையில் சர்ச்சை

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் விலகுவதாக அறிவித்த விடயம், மாகாண சபை அமர்வில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் அனந்தி சசிதரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே அங்கம்... Read more »

அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல – தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல் – பொ.ஐங்கரநேசன்

அம்மாச்சி என்ற சொல் பெயர்ப்பலகைகளில் இடம்பெற்றாலோ அல்லது இடம்பெறாமல் இருந்தாலோ, இதுபோன்ற பாரம்பரிய உணவகங்களை வருங்காலங்களில் திணைக்களங்களோ அல்லது வேறு நிறுவனங்களோ உருவாக்கினாலோ மக்கள் அவற்றை அம்மாச்சி என்றே அழைப்பர். அம்மாச்சி வெறும் பெயர்ச்சொல் அல்ல தமிழ்மக்களின் பாரம்பரியத்தைப் பறை சாற்றும் ஒரு உயிர்ச்சொல்... Read more »

அநாமதேய துண்டுப்பிரசுரம்- தமிழ் மக்கள் பேரவை மறுப்பு

தமிழ் மக்கள் பேரவையின் பெயரில் விடுதலைப்புலிகளின் இலச்சினையுடன் அநாமதேய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இத்துண்டுப் பிரசுரத்திற்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு வெளியிடப்பட்ட இத்துண்டுப் பிரசுரமானது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி, எதிர்வரும் 24 ஆம்... Read more »

யாழ்.அல்லைப்பிட்டி அகழ்வாராட்சி தொடர்பான தகவலை வெளியிட்டது சீனா

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. கடந்த செப்ரெம்பர் 29ஆம் திகதி இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, சீனாவின் ‘சைனா டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »

போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!

பிரேத பரிசோதனை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்க காலதாமதம் ஆகியதால் விரிவுரையாளர் நடராஜா போதநாயகியின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது. திருகோணமலை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) காணாமற் போயிருந்த நிலையில் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் போதநாயகியின்... Read more »