விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தீவிரமாக தேடிவரும் ராணுவம்!

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வடக்கின் பல பகுதிகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதும் இலங்கை ராணுவம், தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சை புல்மோட்டை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றில் அகழ்வுப் பணிக்கான அனுமதியும்... Read more »

பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! : கிளிநொச்சியில் பாரதிராஜா

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.... Read more »

சுகாதார அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம்!

அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி சுகாதார வைத்திய பணிமனைக்கான விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில் அமைச்சர், பிரதி அமைச்சர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி, வைத்தியர்கள் உள்ளிட்ட பலர்... Read more »

சரத் பொன்சேகா விடயத்தில் காட்டிய அக்கறை, தமிழர்கள் விடயத்தில் எங்கே சென்றது?

இலங்கை குடியுரிமை பறிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவித்த அரசாங்கம், வருடக்கணக்கில் எவ்வித வழக்கும் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள் விடயத்தில் பாராமுகமாக செயற்படுவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் பொன்னுத்துரை சிவசுப்மணியம் தெரிவித்துள்ளார்.... Read more »

வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையம் ஒன்றில் மது அருந்திய நபர்களிற்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில்... Read more »

முல்லைத்தீவில் பொலிஸார் மீது கல்வீச்சு!

முல்லைத்தீவு, மணலாறு ஜனகபுரம் பகுதியில் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸாரும் முல்லைத்தீவு – வெலிஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து... Read more »

சம்பந்தன் தொடந்தும் இரட்டைவேடம் போடமுடியாது! : சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு... Read more »

வடக்கில் மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும்

மாகாண மட்ட வணிக கண்காட்சியும், தொழில் சந்தையும் ‘சமதளத்தில் ஒன்றாக’ எனும் தொனிப் பொருளில் இன்று கிளிநொச்சியில் வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியில் மாற்றுதிறனாளிகளால் வடிவமைக்கப்பட்ட கைவினை பொருட்கள்... Read more »

கிபீர் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த 1999.09.15 அன்று இலங்கை விமானப்படையின் கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18ஆம் ஆண்டு நினைவு தினம், மந்துவில் பகுதியில், நேற்று (15) அனுஷ்டிக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24... Read more »

பொலிஸார் பாராபட்சம்!

மாங்குளம் செல்வபுரம் முறிகண்டி பிரதேசத்தில் பெண்ணொருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட சிலருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வசிக்கும் வீட்டிற்கு முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த சிலர் மது போதையில் அந்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். இது... Read more »

புதுக்குடியிருப்பில் தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தினர். மேற்படி நிகழ்வு... Read more »

கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி... Read more »

கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்!!

சர்வதேச தரத்துக்கு அமைய பல மில்லியன்கள் ரூபா செலவில் 2011 ஆம் ஆண்டு யூலை மாதம் 20 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு, இரு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமெனக் கூறப்பட்டிருந்த கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில்... Read more »

கிளிநொச்சியில் இராணுவ வீரரருக்கு விளக்கமறியல்!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் மூதாட்டி ஒருவரை கத்தியால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியிருந்ததாக தெரிவிக்கப்படும் இராணுவ வீரரை, விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில்... Read more »

மாஞ்சோலையில் கோர விபத்து: நால்வரின் நிலை கவலைக்கிடம்

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகமாக பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள், மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து... Read more »

கிளிநொச்சி மாவட்ட வைத்தியத்துறையில் 113 வெற்றிடங்கள்!

யுத்த பாதிப்புக்களில் இருந்து மீண்டு வரும் கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் உட்பட 113 இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆளணி விபரங்கள் தொடர்பில் மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே குறித்த... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஆலய வீதியிலிருந்து விரட்டும் ஆலய நிர்வாகம்!!!

காணா­மல் ஆக்­கப்­பட்ட தமது உற­வு­க­ளைக் கண்­ட­றிந்து தம்­மி­டம் ஒப்­ப­டைக்­கு­மா­று­கோரி அவர்­க­ளது உற­வு­கள் முன்­னெ­டுத்­துள்ள போராட்­டத்தை கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலய வீதி­யில் தொடர்ந்து நடத்­து­வ­தற்கு சிக்­கல் ஏற்­பட்­டுள்­ளது. ஆலய வீதியை போராட்­டம் நடத்த வழங்க முடி­யா­துள்­ள­தா­க­வும் அதற்­கான கார­ணத்­தை­யும் நிர்­வாக சபை­யி­னர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு நேற்­றுக்... Read more »

இரணை தீவு மக்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி!! 189 ஏக்கர் காணி விடுவிப்பு

இரணைத்தீவில் கடற்படையால் சுவீகரிக்கப்பட்ட மக்களுடைய காணிகளில் 189 ஏக்கர் காணியை அளந்து மிகவிரைவில் மக்களிடம் கையளிப்பதற்கு கடற்படை நடவடிக்கை எடுத்துவருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “முழங்காவில் கடற்படை முகாமில் பாதுகாப்பு இராஜாங்க... Read more »

தீ விபத்தில் 2 வயதுக் குழந்தை உயிரிழப்பு!

விசுவமடுவில் நடந்த தீ விபத்துச் சம்பவம் ஒன்றில் 2 அரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் கடையொன்று தீப்பிடித்து எரிந்தது. இரண்டரை வயதுக் குழந்தை உட்பட இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று காலை... Read more »

கிளிநொச்சியில் மீண்டும் வாள் வெட்டுச்சம்பவம்: அறுவா் காயம்!

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண வைபவம் ஒன்றில் நேற்று முன்தினமிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற முறுகல்நிலை வாள்வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறுபேரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்... Read more »