கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள் இனத்தின் விடுதலைக்கு பொருத்தமற்றவர்கள்: மாவை

அரசாங்கத்திடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பழிபோடுபவர்கள், தமிழினத்தின் விடுதலைக்கோ தேசத்தை கட்டியெழுப்புவதற்கோ பொருத்தமற்றவர்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக... Read more »

வாக்குச்சீட்டுகளில் VIP என்று எழுதி வாக்குகளை செல்லுபடியற்றதாக்குவோம் : வேலையற்ற பட்டதாரிகள்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்குரிமையினை போராட்ட ஆயுதமாக பயன்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.சிவகாந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

வேட்பாளர்கள் மீது தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியில் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும்... Read more »

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் : சுகாஸ்

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று (26.01.2018) கரவெட்டியில் நடைபெற்றது. அங்கு... Read more »

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் : அங்கஜன்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு... Read more »

முல்லைத்தீவில் வாக்கு அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டமை தொடர்பாக இருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வாக்காளர் அட்டைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டிலே இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே கைப்பற்றப்பட்டன. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு... Read more »

கூட்டமைப்பின் வேட்பாளர் உதயசிறி உள்ளிட்ட அறுவர் கைது!!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே உதயசிறி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணம்... Read more »

போலி வாக்குச் சீட்டுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் கைது!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற பெண்வேட்பாளர் ஒருவர் சட்டவிரோத போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கரைச்சி பிரதேச சபைக்கு பரந்தன் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 பேரே தபால் மூல வாக்களிப்பில் வாக்களித்தனர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் 120 வாக்காளர்கள் நேற்று தமது வாக்குகளைப் பதிவு செய்தனர். இதன்போது மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும், தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தபால் மூலம் வாக்களித்தனர். குறித்த மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 122... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக அமைச்சர் அனந்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை 4ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு எதிராகவே நேற்று முன்தினம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வேட்பாளர் முகநூலில் தன்னை... Read more »

‘சுத்தமான பசுமை மாநகரம்’ : கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின், யாழ்.மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ‘சுத்தமான பசுமை மாநகரம்’ என்ற தொனிப்பொருளினாலான குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழரசுக் கட்சியின்... Read more »

தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி பொறுமை காக்கின்றோம்: சித்தார்த்தன்

காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற... Read more »

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை கைதுசெய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின்... Read more »

அபிவிருத்தி இன்மையினாலேயே களத்திற்கு வந்தோம் : சுயேட்சை வேட்பாளர்.

முப்பது ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்காததால், சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தினை கொண்ட சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பாடி விருந்தினர் விடுதியில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்... Read more »

இரட்ணஜீவன்  ஹுல் பத்திரிகை வெளியீடுகள் பக்கச்சார்பானவை -தமிழ்த்தேசிய பேரவை

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன்  ஹுல் வெளியிட்டதாக பத்திரிகை அறிக்கை ஒன்று மின்னஞ்சலில் கிடைத்துள்ளது .அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 17.01.2018 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் விஞ்ஞாபன வெளியீட்டின்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கம்வகிக்கின்ற என்னைப் பற்றித்  தமிழ்த் தேசியப் பேரவையின்... Read more »

அபிவிருத்தியை முன்னிறுத்தி ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு, சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையில், யாழ். கந்தர்மடம் பகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.... Read more »

தேர்தலூடாக தென்னிலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டும்!! : ஜனநாயக போராளிகள் கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கூடாக தென்னிலங்கைக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பொன்று நேற்று (வியாழக்கிழமை) பகல் பாலையடிவட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல்... Read more »

ஜனாதிபதியின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை தீயிட்டு எரிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள... Read more »

எமது வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டது: அங்கஜன்

எமது பிரதேச வேட்பாளர்களின் வெற்றி இப்பொழுதே உறுதி செய்யப்பட்டு விட்டதெனவும் நீங்கள் அளிக்கும் வாக்குகள் எமது வாக்குறுதிகளை உறுதியாக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். வலி தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சுதுமலை பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச செயற்பாட்டு அலுவலகத்தினை... Read more »

தேர்தலில் ஈ.பி.டி.பி அமோக வெற்றி பெறும்: டக்ளஸ் தேவானந்தா

மக்கள் மாற்றத்தினையே விரும்புகின்றார்கள் எனவே நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெறும், என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில்... Read more »