- Thursday
- April 9th, 2026
தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால்...
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழில், இன்றையதினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ்.பொது நூலகத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன்...
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் புதன்கிழமை (24) கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு, பணத்தை செலுத்த முற்பட்டுள்ளனர். அவ்வேளை, அவர்கள் மீது சந்தேகம் எழுந்த காரணத்தினால் கடையில் இருந்தவர், அவர்களை சில கேள்விகள்...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தீவிலே...
அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார்...
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (25) இரவு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்தார். இளையராஜாவின் இசையில் பாரதி திரைப் படத்தில் :மயில் போலப் பொண்ணு ஒன்னு' என்ற பாடலை பாடியதற்காக இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தமை...
பல்வேறு நிலைகளில் உள்ள இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது. மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஊடாக வழங்கப்படுகின்றன. இலங்கையர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில்கள் 2024-2025 கல்வி அமர்வுக்கானது என கொழும்பு இந்திய...
ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கிலேயே இந்த புதிய கட்டடத் தொகுதி வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில்...
”தேசிய அடையாள அட்டை இலக்கத்தை தனிநபரின் வரி இலக்கமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மக்களுக்கு இலகுவாக ரின் இலக்கம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”...
கிளிநொச்சி ஏ.09 வீதியின் ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதுடன் எதிரே வந்த...
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த தொழில் அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போது, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின்...
உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா இன்று சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கீவ் நகரில் ஒருவரும், கார்கீவ் நகரில் 5 பேரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன், இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதால்...
கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் வங்கியின் பெண் உத்தியோகத்தரும் அவரது கணவனும் இணைந்து முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து...
நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் இன்றைய தினம் (23 )காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளனர் விபத்தில் 08 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் நகரை நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் , தனியார் பேருந்தும் மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது என முதல் கட்ட...
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது யாழ்ப்பாணத்தில் விசேட டெங்குக்...
காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டுநேற்று திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் நிதிப்பங்களிப்பில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோனின் தலைமையிலான கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் சரீர ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா...
வாகனத்தைக் கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் அதன் உரிமையை கொள்வனவாளர் தமக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகனங்களின் உண்மையான பதிவு செய்யப்பட்ட உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வாகனத்தினைக் கொள்வனவு செய்யும்...
உணவருந்திக்கொண்டு இருந்த வேளை விக்கல் ஏற்பட்டத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த 41 வயதான மயில்வாகனம் ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று (21) மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென விக்கல் ஏற்பட்டதை அடுத்து , கதிரையில் இருந்து மயங்கி சரிந்துள்ளார். உடனே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற...
Loading posts...
All posts loaded
No more posts
