Ad Widget

அதிக போதைப்பொருள் பாவனை : இளைஞர் உயிரிழப்பு!

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனையில் இளைஞன் போதைப்பொருளை அதீத அளவு நுகர்ந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பகுதியில் இளைஞன் ஒருவர் போதைப்பொருள் பாவனையால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts