200 நாட்களாகியும் தீர்வில்லை: உறவினர்கள் கண்ணீர்

யுத்தத்தின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (வியாழக்கிழமை) 200 நாட்களை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து, மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாது இம் மக்கள் இரவு பகலாக...

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள் :நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

இலங்கையில் முத்திரைத் தீர்வைக் கட்டளைச் சட்டம், முதல் முதலில் 1909ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றம் 1982ஆம் ஆண்டின் முத்திரைத் தீர்வைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலம் சாதனங்களுக்கும் (Instruments), ஆவணங்களுக்கும் (Documents) அவற்றின் தொடர்பாகவும் தீர்வைகள் அறவிடப்பட்டன. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் கீழ் அசையும், அசையாச் சொத்துக்கள் மீதான முத்திரைத் தீர்வை மாகாண...
Ad Widget

களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் : நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த சிங்கள மொழி பேசுகின்ற நிபுணத்துவ வைத்தியர்களும், தாதியர்களும், ஏனைய ஊழியர்களும், என் மீது கரிசனை காட்டி...

சர்வதேச நடன போட்டியொன்றில் கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞன் முதலிடம்

இந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்பட்ட ஹிடின் ஜடியல் தேசிய மட்ட போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சிறந்த ஆற்றுகையாளராக தெரிவு செய்யப்பட்ட மலையாளபுரம்...

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது.

20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வடக்கு மாகாண சபையும் நிராகரித்துள்ளது. அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) கூடிய வடக்கு மாகாண சபை அமர்வில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் இத் தீர்மானம், அவைத்தலைவர் ஊடாக ஆளுநருக்கு...

கிருசாந்தியின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ரயில் பயணத்தில் வெளிப்பட்ட தமிழ் பெண்ணின் அன்பு!! : சிங்கள மக்கள் நெகிழ்வு

ரயில் பயணத்தின் போது தமிழ் பெண்ணொருவரிடம் கண்ட அன்பினால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.உடரட்ட மெனிக்கே ரயிலில் தமிழ் பெண் ஒருவர் செயற்பட்ட முறையினை தென்னிலங்கை சிங்கள சமூத்தவர்கள் பாராட்டியுள்ளனர். கொழும்பை சேர்ந்த ஒருவர் உடரட்ட மெனிக்கே ரயிலில் தனது பிள்ளையுடன் பயணித்துள்ளார். கூட்டம் அதிகமாக இருந்த ரயிலில் அந்த தமிழ் பெண்...

கோலி, மணிஷ் பாண்டே அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி

இலங்கைக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்று நடைபெற்றது. பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டி மழை...

இலங்கை வந்த இந்திய கிரிக்கெட் வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

17 வயதின் கீழ் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை வருகை தந்திருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சி பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை ஐந்து வீரர்கள் நீச்சல் தடாகத்தில் குளிக்கச் சென்ற வேளையில், இந்தியாவின் குஜராத் பகுதியைச் சேர்ந்த சோனா நரேந்திரா...

பொலிஸ் நிலையங்களுக்கு சாரதிகளின் மதுபோதையை பரிசோதிக்கும் கருவிகள்

மது அருந்திய சாரதிகளின் போதையை பரிசோதிக்கும் 90 ஆயிரம் கருவிகள் நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொளள்ப்படும். அவ்வாறான சாரதிகளின் அனுமதி பத்திரங்களை தற்காலிகமாகவேனும் குறிப்பிட்ட காலத்திற்கு இடைநிறுத்தி வைக்குமாறு...

வடமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 பேரை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை

வடமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 பேர் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எந்த வித இன அடிப்படையிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாதென்றும், எவருக்காவது அநீதி இழைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க பாராளுமன்ற அமர்வின் போது...

புதுமாத்தளன் கடற்பரப்பில் தென்பகுதி மீனவர்கள் அடாவடி: தமிழ் மீனவர்கள் இருவர் காயம்!

புதுமாத்தளன் சாலை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களின் படகுகள் மீது தென்பகுதி மீனவர்களின் படகுகள் மோதியதில் புதுமாத்தளன் பிரதேச மீனவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுமாத்தளன் தொடக்கம் சாலை பருத்தித்துறை வரையான கடற்பகுதியில் தென்பகுதியிலிருந்து வருகை தந்த மீனவர்கள் சட்டவிரோதமான தொழில்...

யாழ். கோட்டையில் மீண்டும் ராணுவம்! : டக்ளஸ் கண்டனம்

வரலாற்று தொன்மைமிக்க சின்னமாக விளங்கும் யாழ்.கோட்டையில், மீண்டும் படையினரை நிலைநிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழ் மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றினால், அவர்களை யாழ். கோட்டையில் நிலைநிறுத்த வேண்டுமென வவுனியாவில் விஹாராதிபதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தனி அலுவலகங்களை அமைப்பதற்கான கொடுப்பனவு வழங்குவது தொடர்பான குறைநிரப்பு யோசனை நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 13 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல்போனோர் பிரச்சினைக்கு மனிதாபிமான ரீதியில் தீர்வு: ஜனாதிபதி

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையில் குறுகிய காலத்திற்குள் மனிதாபிமான ரீதியில் தீர்வைக்காண நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி உறுதியளித்துள்ளார். இதன்போது, காணாமல் போனோர் பிரச்சினைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் குறுகிய காலத்தில் தீர்வு காணப்படும்...

தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட பிரகடனம்

நேற்று முன்தினம் {05/09/17} யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்குபடுத்தப்பட்ட "எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் " எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்வெளியிடப்பட்ட பிரகடனம். பிரகடனம் தமிழ் மக்கள் பேரவை 05/09/17 1. இலங்கைத்தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, இந்த இனப்பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இனம்கண்டு நிரந்தரமாகத் தீர்ப்பதாக அமைய...

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு! : சம்பந்தன்

”உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நினைவுப் பேருரையில் கலந்துகொண்டு...

ராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஊறணி பாடசாலைக் காணி விடுவிப்பு!

ராணுவம் கையகப்படுத்தியிருந்த யாழ். வலிகாமம் வடக்கு ஊறணி பாடசாலைக் காணி, இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27 வருடங்களாக படையினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணியை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டு வந்த கோரிக்கையின் பிரகாரம், இன்றைய தினம் இக் காணி விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட 3.9 ஏக்கர் அளவுடைய காணி, யாழ். மாவட்ட...

பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு 100 கோடி ரூபா!!

பலாலி விமான நிலையத்தை 100 கோடி ரூபா செலவில், அபிவிருத்தி செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலி பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்கள், இருக்கும் நிதியினை கொண்டு வானூர்தி நிலையத்தை முழு அளவிலான சிவில் வானூர்தி நிலையமாக மாற்ற வேண்டும் என வானூர்தி அதிகார சபையின் இயக்குநர் நாயகம் எச் எம்...

கேரளா டயரீஸ் நூலின் இரண்டாம் பாகத்தினை மிக விரைவில் யாழில் வெளியீடு செய்வேன் : ம. அருளினியன்

யாழில். சர்ச்சையை தோற்றுவித்த நூல் வெளியீடு யாழ்.நகர மத்தியில் உள்ள பிரபல விடுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. ஆனந்த விகடனில், ம. அருளினியன் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு கால பகுதியில் , மாணவ பத்திரிகையாளனாக இருந்த வேளை பெண் போராளி ஒருவர் பற்றிய நேர்காணல் ஒன்றினை எழுதி இருந்தார். அது அக்கால...
Loading posts...

All posts loaded

No more posts