- Thursday
- May 14th, 2026
இந்த திட்டத்தை இலங்கை போக்குவரத்துச் சபை தனது இணையத்தளம் ஊடாக நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. பயணிகள் தாம் பயணிக்க விரும்பும் மாவட்டத்தைத் தெரிவு செய்து தமது ஆசனத்தை முற்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணத்தை இணையம் ஊடாக செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இணையத்தள முகவரி வருமாறு: https://sltb.express.lk/
“தன் இன மக்களால் நிராகரிக்கப்பட்டு, பின்கதவால் அரசியலுக்குள் பிரவேசித்தவர்கள் நான் துப்பாக்கியை பெற்றுக் கொண்டதை மக்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்ட வேண்டுமே அன்றி தமிழினத்தினை கூறுபோட முற்பட கூடாது” என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடக்கு மாகாண சபை...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை நீக்கிவிட்டு, தினேஸ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சித் தலைவரான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றிலுள்ள 92 மொத்த எதிரணி உறுப்பினர்களில் 70...
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது தவறை ஏற்றுக்கொண்டால் தனது பதவியை விட்டு விலகுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். டெனிஸ்வரனின் அமைச்சுப் பதவி தொடர்பாக விவாதிப்பதற்காக, வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நீதிமன்ற கட்டளை நிறைவேற்றப்படாவிடின், அந்த...
வட.மாகாண சபை கேலிக்குரியதாக மாறியமைக்கு ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களே காரணமென வட மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆயுத போராட்டங்கள் ஊடாக பெறப்பட்ட குறைந்தபட்ச அதிகாரங்கள் கொண்ட மாகாணசபை, ஆளுங்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு...
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார். டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வடமாகாண சபையின் விசேட அமர்வின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கியை வைத்திருப்பதாக...
வட.மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனுக்கு எதிராக இன்று (திங்கட்கிழமை) வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட.மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார். இதன்போது பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை...
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ. மிதுன்ஜா 17 வயதுடைய உயத்தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை கல்வி பயின்ற பாடசாலையில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களின்...
பாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் வரும் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது. “எரிபொருள்களின் விலை உயர்வையடுத்து வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் கூடி ஆராய்ந்தது....
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக சம்பவ இடத்திலேயே விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் அதிகரிக்கப்படுகின்றன. வாகான புகைப் பரிசோதனைச் சான்றிதழை எடுத்துச் செல்லத் தவறினால் 500 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என புதிய போக்குவரத்து விதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அந்தச் சான்றிதழ் வாகன வரி அனுமதிப் பத்திரம்...
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த சனிக்கிழமை முற்பகல் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணும், அவரது ஆறு வயது...
யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில்...
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கருத்தறியும் அமர்விற்கு வருகைதந்த காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள்...
வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமென இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இவ்வாறு செயற்படுவதாக அவர் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- “சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பிவருகின்றன. எனினும், இராணுவம் மீதான நம்பிக்கையினைக் கைவிடவேண்டாம்....
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமற்போனவர்கள் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில், அவர்களது உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக அந்த அலுவலகம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் உறவினர்கள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு...
பொலிஸ் அதிகாரங்கள் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு சட்டபூர்வமாக முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பாரிய அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ள போதைப்பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை கட்டுப்படுத்த பொலிஸார் பாராட்டத்தக்க சேவையை ஆற்றிவருகின்ற போதிலும், நாட்டின் மோசமான நிலைமையை கருத்திற் கொண்டு முப்படையினரின் உதவியை நாட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர்...
மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் குறித்த அலுவலகத்தினை திறந்து வைத்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ப.அரியரத்தினம் ஆகியோரின் மாகாண நிதியொதுக்கீட்டில் இவ்வலுவலகம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வட.மாகாண மகளிர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி...
மரண தண்டனையை நிறைவேற்றுவதாயின் முதலில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைச் சந்தேகநபர்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுட்டவர்களுக்கே அதனை நிறைவேற்ற வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பாதாள உலகக் குழுவை முதலில் குறிவைப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்...
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வு நடத்துவதனால் ஆசிரியர்கள் சிலருக்கு எதிராக தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தப் பாடசாலையின் அதிபர், இவ்வாறான...
யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தை நீக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, யாழ்ப்பணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாமிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
