- Monday
- May 11th, 2026
வவுனியா வடக்கின் புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் தலைமறைவான நபரைத் தேடுவதற்கு பெருமளவு இராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதூர் நாகதம்பிரான் ஆலயத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் நேற்றிரவு ஆயதங்களுடன் நபர் ஒருவர் செல்வதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. குறித்த நபரைக் கைது செய்யும் நோக்குடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸார் சிவில் உடையில் மறைந்திருந்தனர்....
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலக வீதியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தந்தையான வீரசிங்கம் ரவீந்திரன் (வயது – 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றிய அவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார்....
யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது. அதனால் வைத்தியசாலையில் நோயாளியிடம் திருடிய குற்றச்சாட்டு வழக்கில் பிணை வழங்கிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், நல்லூர் ஆலயத்தில் பெண்ணிடம் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் விளக்கமறியலில் வைக்குமாறு...
மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில்...
யாழ். நீதவான் நீதிமன்ற நீதவானாக நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல் பதவியேற்றுக்கொண்டார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள், நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போலை வரவேற்றனர். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர், வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தார். மலையகத்தில் பிறந்த நீதவான் அந்தோனி...
நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனரென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இயற்கை...
வடக்கில், பாதுகாப்பு படையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி 2 ஆம் வாரத்தில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவித்துள்ளது. இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம்,...
புத்தாண்டு தினமான இன்று முதல் இலங்கையில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. இதனை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தாரிகள் புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு அனுமதிப்பெற்ற ஒளிபடப்பிடிப்பு நிலையங்களிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்படவேண்டுமெனவும், ஒளிப்படத்திற்கான பற்றுச்சீட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சென்ற மாத தொடக்கத்தில் தங்க சங்கிலிகளை திருடிய போது மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண், மீணடும் நேற்று முன்தினமும் யாழ் போதனா வைத்தியசாலையில் தங்கச்சங்கிலியை அபேஸ் செய்தார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைபவர்களின் தங்கச்சங்கிலிகளிற்கு உத்தரவாதம் கிடையாது என பொதுமக்கள் அச்சப்படுமளவிற்கு திருடர்களின் ராஜ்ஜியம் கொடிகட்டி...
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். வடபிராந்திய பிரதம முகாமையாளரை மாற்றுமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அந்த தொழிற்சங்கம் உரிய தரப்புளுக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வடபிராந்திய...
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இளைஞர் அணி தெரிவு யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டத் தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் கடந்த சனிக்கிழமை(29) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி தொடர்பான வரலாறு தொடர்பில் உரையாற்றிய பெ.கனகசபாபதி, தொடர்ந்து இளைஞர் அணி புனரமைப்புக்காக புதிய நிர்வாகத் தெரிவை ஆரம்பித்துவைத்தார்....
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாபுலவு மக்கள் தமது பூர்வீக காணிகளில் அடாத்தாக அமைக்கப்பட்ட இராணுவ முகாமை அகற்றி தம்மை தமது சொந்த பூமியில் குடியமர்த்துமாறு கோரி கடந்த 2017.03.01 அன்று ஆரம்பித்த தொடர் போராட்டமானது 672 ஆவது நாளாக கேப்பாபுலவு இராணுவ தலைமையகம் முன்பாக இடம்பெற்றுவருகிறது இந்நிலையில் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்...
வீட்டில் தனித்திருந்த வயோதிபர்களை அச்சுறுத்தி 55 பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அராலி தெற்கு வட்டுக்கோட்டை உடையார்கட்டு பகுதியில் உள்ள வீடொன்றிலையே இக்கொள்ளைச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நடைபெற்று உள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் 62 வயதுடைய கணவர் , மனைவி மற்றும்...
முறிகண்டிப் பகுதியில் ரயிலுடன் மோதி 27 இற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன. ஸ்கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர் ஒருவர் தனது கால்நடைகளை திருமுறிகண்டிப் பகுதியில் வைத்துப் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று குறித்த கால்நடைகளை மேய்ச்சலிற்காக திறந்து விட்ட நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த...
சமூகங்களை இன, மத அடிப்படையில் பிரிக்கும் குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட இந்த புதிய வருடத்தில் திடசங்கற்பம் கொள்வோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். சமூகங்களிடையே பிரிவினையை கொண்டுவரும் பாதக காரணிகளுக்குள் சிக்கிவிடக் கூடாதென்றும் அவர் கூறியுள்ளார். புதிய வருடத்திற்குள் காலடி எடுத்துவைக்கும்...
அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக வடக்கு மாகாணத்தில் ஆளுநராக செயற்பட்டுவந்த, ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கமைய, குறித்த பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் அனைத்து மாகாணங்களிலும் புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி...
நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ச்சியாக கடும் குளிர் நிலவுவதற்கு அதிகம் வாய்ப்புவுள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. வானிலை அவதான நிலையம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக கடும் குளிர் நிலவுமென அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது....
இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டின் புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ‘பல எதிர்பார்ப்புக்களுடன் 2019ஆம் ஆண்டு பிறக்கின்றது. மக்கள் தமது...
பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைகழகத்தில் தான் மோசமாக பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் தெரிவித்திருந்த மாணவன் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென அறைக்குள் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை அவதானித்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக...
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இரண்டாவது சம்பவமும் பதிவாகியுள்ளது. கடந்த மாத இறுதியில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த அதே பாணியில் இந்த இளைஞரும் முயற்சித்துள்ளார். இந்தச் சம்பவம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலைய தடுப்புக்காவல் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. தனக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
