மாகாண ஆளுநர்கள் பதவி விலகல்: ஜனாதிபதியிடம் கடிதம் கையளிப்பு

அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக வடக்கு மாகாணத்தில் ஆளுநராக செயற்பட்டுவந்த, ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கமைய, குறித்த பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அனைத்து மாகாணங்களிலும் புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts