- Saturday
- May 9th, 2026
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீர்கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி...
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கான பணப்பரிமாற்றம் இணையத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Whitestream புலனாய்வு நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில்...
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதார்...
வடமராட்சி கிழக்கு பூனைத்தொடுவாய் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 125 கிலோ கஞ்சாவை காட்டிக் கொடுத்த இளைஞன் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும், பாடல்களை தொலைபேசியில் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸாா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி பூனைத்தொடுவாய் பகுதியில் 125 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு இளைஞா்...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் குற்றவாளிகள் இல்லை என்றால், அவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடராமல் உடன் விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பல அரசியல் தலைவர்களும் மாணவர்கள் விடுதலை குறித்து...
யாழ்.மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். மானிப்பாயில் ஏப்ரல் 10ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில்...
வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த தடை ஏப்பிரல் 30 ஆம் திகதி நீக்கப்பட்டது. இந்நிலையில்...
புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தமையால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிலாபம், முகுனுவட்டன பிரதேசத்தைச் சேர்ந்த அஜித் பிரசன்ன (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாரவில நகரத்தில் பொலிஸார் சோதனை...
நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு காலை 7 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் மக்களிடத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழ்நிலை...
இலங்கையில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தரம் 6 முதல் உயர்தரம் வரையான மாணவர்களுக்கே இன்று (திங்கட்கிழமை) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதியே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து பாடசாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை பாடசாலை...
மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் முள்ளிவாய்க்கால் நினைவுகூரலுக்கான உகந்த சூழலை உருவாக்குமாறும் விக்னேஸ்வரன் ஜனதிபதிக்கு கடிதம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் சிலரின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம்...
வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் உடமையில் வைத்திருந்தால் இன்று அல்லது நாளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். நாடுமுழுவதும் தற்போது முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புத் தேடுதலில் போது வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவச் சீருடைகள் என்பன கைப்பற்றப்படுகின்றன. அவற்றை வைத்திருப்போர் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் ஊடக அமையித்தில் ஊடக சந்திப்பு....
பாதுகாப்பு சோதனை என பல்கலைக்கழகத்துக்கு உள்ளே சென்று அவசரகால சட்டத்தை பயன்படுத்தி, இணையத்தில் பகிரங்கமாக பகிரப்படும் ஒரு படத்தை காரணமாக காட்டி, மாணவ தலைவர்களை கைது செய்வது அதிகபிரசங்கித்தனம். எந்த நாட்டிலும் பல்கலைகழகம் ஒரு நாற்று மேடை. இப்போது அமைதியாக கிடக்கும் கழகத்தில், வன்முறை என்ற விதையை விதைத்தால், அது அங்கே வன்முறை பயிராகத்தான் முளைக்கும்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்...
வெடிபொருள்களுடன் 20 வாகனங்கள் வடக்கு மாகாணத்துக்குள் நுழைந்துள்ளதாக வெளியாகின்ற தகவல்கள் குறித்து யாரும் பீதியடைய வேண்டியதில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். வெடிபொருள்களுடன் 20 வாகனங்கள் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியாவில் நான்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், சந்தேகத்துக்குரிய வாகனங்களின் பதிவு இலக்கங்கள்...
மொனறாகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேகத்தின் அடிப்படையில் அவர் இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும்போது, அவரிடமிருந்து ஆவணங்கள் சிலவற்றையும் ஒரு இலட்சத்து இருபத்தோராயிரத்து அறுநூறு ரூபாய் பணமும் மீட்கப்பட்டதாக மொனறாகலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் கப் ரக வாகனமொன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம்...
யாழ்.நகாில் உள்ள ஜிம்மா பள்ளிவாசல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இராணுவம் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு வர்த்தக நிலையங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சஹரான் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளதாக அரச ஊடகம் புலனாய்வுத் துறையினரை மேற்கோளிட்டு இன்று (சனிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது . அதில் தற்கொலைதாரிகளுடன் சஹரான் வந்திருந்தாலும் அவர் தற்கொலை தாக்குதல் நடத்தாமல் தூர...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் அணைத்து சமர்ப்பணங்கள் செய்ய சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளனர். இதற்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உரிய அனுமதி வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்...
Loading posts...
All posts loaded
No more posts
