- Friday
- May 1st, 2026
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு...
வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு...
இலங்கையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர பயன்பாட்டிற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றிற்குள், நேற்று (3) மாலை இந்த அனர்த்தம் நடந்தது. கணவருடன்ஏற்பட்ட தகராறையடுத்து தனது பிள்ளைகளுடன்...
வடக்கு மாகாண காணி ஆவணங்களை அநுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வாயிலை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி...
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு , பொம்மைவெளி , ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண்...
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார். அந்தவகையில் இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் அவர்களுக்கு மின்சாரத்தை வழங்க சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளதாக...
யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். அவர்களில் ஊர்காவற்றுறை கடற்தொழிலாளி ஒருவரும் அடங்குவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பூநகரி...
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியை மறித்து இன்றும் (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக...
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்யும் விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்தனர். கொவிட்...
இரணைதீவுக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்றபோது, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இறப்பவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணை மாதா நகர் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், மெசிடோ...
வடமாகாணத்தில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் 563 பேரும், பெப்ரவரி மாதத்தில் 278 பேரும் கோரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 128 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில்...
வடக்கில் மேலும் 9 பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட 292 பேரின் மாதிரிகள் பரிசோதனையிலேயே 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர், நவாலியில் கண்டறியப்பட்ட ஆசிரியையுடன் தொடர்புடையவர்கள் என்றும் மூவர்...
யாழ்ப்பாணம், நாவலடி மணியந்தோட்டத்தில் 09 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 24 வயதான தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கைதான தாய்க்கு மனநிலை பரிசோதனை மேற்கொண்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கவும் குழந்தையின் உடல்நிலை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணம் மேலதிக...
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்மானம் சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில் நின்றிருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர். எனினும் வாகனம் நிற்காமல் சென்றதையடுத்து அதன் மீது துப்பாக்கி பிரயோகம்...
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைத்தீவு பகுதியில் இணங்காணப்பட்ட இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கொரோனா கட்டுப்பாட்டுக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு என ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 9 ஆயிரத்து 275 பேருக்கு ஒக்ஸ்போர்ட்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்துகொண்டனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது....
Loading posts...
All posts loaded
No more posts
