பருத்தித்துறை நகரில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மந்திகை பகுதியில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு...

கோண்டாவில் வன்முறைக்கு காரணம் ஆவா; ஜி குழுவை இலக்கு வைத்துத் தாக்குதல்

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள்...
Ad Widget

உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ....

அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது – வைத்தியர் ரவி ரன்னன் எலிய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர்...

14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்!

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதேவேளை ஜூலை 5 முதல் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல் இருக்கும்...

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன. இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு...

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்க பரிசீலனை!!

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை இந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3 ஆயிரம் பாடசாலைகள்...

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களம், ஜுலை 5ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது. தொலைபேசி மூலம் திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடல் வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகள் அமைப்பதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஈடுபடுமாறு யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. மேலும் குறித்த வளங்களின் ஊடாக பொருளாதாரத்தை உயர்ந்த முடியும் எனவும் அந்த கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக யாழ்.வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் 6 பேர் கொண்ட கும்பல் மீண்டும் அடாவடி!

மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும்...

பொதுமக்கள் தமது பிரச்சினைகளை எனக்கு அறிவித்தால் துரித நடவடிக்கை” – மாவட்ட டிஜஜி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், பொலிஸ் காவலரங்களையும் அதிகரிக்குமாறு சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில்...

பலாலியில் மக்களின் விவசாய காணிகளில் இராணுவம் விவசாயம்!

பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும்...

6 மணிநேர போராட்டத்தின் பின் வாள்வெட்டில் துண்டாடப்பட்ட கை மீள பொருத்தப்பட்டது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீள பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை நேற்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக...

டெல்டாவை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை!!

டெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கொரோனா பரவல் நாட்டில் தொடங்கியதிலிருந்து பின்பற்றி வரும் செயற்திட்டத்தையே அரசாங்கம் தொடர்கிறது என்றும் இந்த சூழ்நிலையை...

யாழில் கொரோனா மரணம் மேலும் அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதற்கமை யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நல்லூரைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவரே நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார் இவரின் சடலம், சுகாதார விதிகளுக்கு அமைய மின் தகனம் செய்யப்பட்டுள்ளதாக...

யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு!

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) மீசாலை – புத்துார் சந்தியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் மந்துவில் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞன் காயமடைந்த நிலையில் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த குறித்த...

மீசாலையில் விபத்து – தென்மராட்சியில் பல பகுதிகள் இருளில் மூழ்கியது!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை...

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் மேலும் இருவர் சாவு!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில்...

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு அரசின் இணைப்பாளர் நியமனம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான அரசின் மீள்குடியேற்ற இணைப்பாளராக பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கிவைத்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கீதாநாத் காசிலிங்கம், 2019ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதிலிருந்து பிரமரின் இணைப்புச் செயலாளராக உள்ளார்.

யாழில் வன்முறைக்கும்பல் அட்டகாசம் : 4 பேர் படுகாயம் : சொத்துக்களுக்கு சேதம் !

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள செல்வபுரம் சிவன் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts