மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை

மின்சாரக் கட்டணத்தை பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தபோதும் விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிக்கவுள்ளதாக மின்சார சபையின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். அதேநேரம், மின் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமே வெற்றிபெற வேண்டும் எனவும் இன்று...

வவுனியா பல்கலைக் கழகத்தின் கல்வெட்டில் திடீர் மாற்றம்!!!: இடமாறிய தமிழ் மொழி!

வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கப்பகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்திற்கு இன்று(வெள்ளிக்கிழமை) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடிவில்...
Ad Widget

ஆயிரத்தை கடக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 31...

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின், மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 15 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் பூஸ்டர் தடுப்பூசியினை அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொது...

யாழில். நடமாடும் கஞ்சா வியாபாரி கைது!

யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக...

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்!

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மிது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு பொருளை கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளரொருவர் அங்குள்ள பொருட்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார். இதன்போது ஊழியருக்கும்...

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மீது தாக்குதல்!

அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனைக் கண்டித்த சிரேஷ்ட மாணவன் யாழ்.பல்கலைக்கு வெளியில் வைத்துத் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார்....

இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க தயாராகின்றது அரசாங்கம் – வெள்ளிக்கிழமை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு?

லங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா? என்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக சுகாதார அமைச்சரின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கூட்டத்தின் நிறைவில் முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளது – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு தற்போது ஒமிக்ரோன் அலையில் சிக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெல்டா அலையுடன் ஒப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைவாகவே இருந்தபோதிலும், நோய்த்தொற்று ஏற்பட்டால் அறிகுறிகளைக் குறைப்பதற்காக தாமதமின்றி பூஸ்டர் டோஸ்களைப் பெறுமாறு சுகாதார...

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு!

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன. இதன்போதே, விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை...

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களிற்கு பிசிஆர் சோதனை இடைநிறுத்தம்!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களிற்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பினால் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனம்!!- சம்பந்தன்

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார். இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு...

வடக்கு – தமிழக மீனவர்களை மோதவைக்க இராஜதந்திர நடவடிக்கை : சபையில் டக்ளஸ், சார்ள்ஸ் எம்பி. கருத்துமோதல்

வடக்கு மற்றும் தமிழக மீனவர்களை மோத வைப்பதற்கான இராஜதந்திர நகர்வுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்டுகின்றதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறித்த கேள்வியை கடற்தொழில் அமைச்சரிடம் வினவினார். இந்திய இழுவைப்படகு பிரச்சினைக்கு இரு மாதங்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர்...

மருந்து தட்டுப்பாட்டுக்கு அடுத்த சில நாட்களில் தீர்வு – சன்ன ஜயசுமன

இலங்கையில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். https://www.jaffnajournal.com/wp-content/uploads/2021/06/medical-medicine-pills-pill-tablets-capsules-capsules-tablet-packed-.jpg நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கடன் உதவியுடன் மருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “இலங்கையில்...

யாழில் கொரோனா பரவல் அதிகரிப்பு – இது ஆரோக்கியமானது அல்ல!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துச் செல்கின்றது எனவும் இது ஆரோக்கியமானது அல்ல எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். நேற்றையதினம் (08) யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் கொரோனா பரவலானது அதிகரித்துச் செல்கின்றது....

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் கோரிக்கை!!

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பது இந்த தருணத்தில் அவசியமானது என அதன் தலைவர் சுமித் விஜேசிங்க, அரசுக்கு அறிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெட்கோ எரிபொருள்களின் விலையை அரசு திருத்தியமைக்கும் என நேற்று இடம்பெற்ற...

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை மேலும் நீடிப்பு

2021 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'Exams...

கிழக்கு கடற்பரப்பில் கரை ஒதுங்கும் வெளிநாட்டுக் கழிவுகள்!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாதீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்குவதாக பொதுமக்களும், மீனவர்களும், தெரிவிக்கின்றனர். காலணிகள் வெற்றுப் போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள், உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குவதாகவும், இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரையை இரசிக்க வருபர்களுக்கும்...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 35 பேர் உயிரிழப்பு!! – மக்களே அவதானம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 22 பேரும் பெண்கள் 13 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 656ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள்அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் நேற்று (திங்கட்கிழமை) இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் அதில் இருந்த 11 மீனவர்களையும்...
Loading posts...

All posts loaded

No more posts