- Tuesday
- April 21st, 2026
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும்...
சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்புளூவன்சா உள்ளிட்ட பல வைரஸ் நோய்களினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என...
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள். இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர்....
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும், ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தாம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சித் தலைவர்களின் கூட்டம்...
வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக நாட்டிற்கு வரும் காற்றின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பில் உள்ள தூசி...
இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவினால் இதுகுறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.15 அளவிலான நிலைவரத்தின் படி காற்றின் தரச்சுடெண், நீர்கொழும்பு – 144, கண்டி – 136, கம்பஹா 127, கொழும்பு – 122, யாழ்ப்பாணம்...
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் அறிந்ததையடுத்து, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் திரண்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பகுதியில் சுமார் பத்திற்கும் மேற்ப்பட்ட புலனாய்வாளர்களும்...
தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று முன்தினம் (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர்...
தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் ஊடாக மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது குறித்து நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தவறான தகவல்களைத்...
வட மாகாணத்தில் காலநிலை மாற்றத்தால் உயிரிழந்த கால்நடைகளை உரிய முறையில் அடக்கம் செய்வதனை உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. “அண்மைய நாட்களில் வெப்பநிலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத கால்நடைகள் இறந்துள்ளன...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை பதவிவிலகுமாறு மத்திய குழுவினால் கோர முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். திருகோணமலையில் செயற்படாத நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சம்பந்தனை பதவி விலக்கி, வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை 10.50 மணியளவில் அளவில் சென்னையில் இருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து மீண்டும் விமானம் முற்பகல் 11.50 மணிக்கு சென்னைக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே வாரந்தோறும்...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று (12) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மோசமான காலநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், குறித்த அபாய நிலை நீங்கியுள்ளதால், இன்று முதல் வழமை போன்று பாடசாலைகளை...
ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள தீர்வாக அமையாது என்றும் அதுவே தமது கட்சியின் நிலைப்பாடு என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அவர் இதனை...
கணக்கெடுப்பொன்றின்படி, பொருளாதார நெருக்கடி காரணமாக 200 பில்லியன் ரூபா பெறுமதியுடைய தங்க நகைகள் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் 193 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்கள் அடகு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. உரிமம் பெற்ற 13...
ரஷ்யா- உக்ரைன் போர், மெக்சிகோ வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால், 2022ஆம் ஆண்டு உலகம் முழுதும், 67 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தை தலைமையிடமாக வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, “இந்தாண்டு மட்டும் உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த வன்முறைகளில், இதுவரை...
மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடத்தில்...
வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்து,சுபோகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின் சில பகுதிகளில் வழியில் தர சுட்டெண் சற்று உயர்வாக காணப்படுகின்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது சாதாரணமாக வளி...
காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று மாசடைவு வீதம் அதிகளவில் காணப்படுகின்றது. அது தொடர்பில் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுற்றுப்புறக் காற்று தர...
கொரியன் சீரிஸ் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரியா அரசு மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜொங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்துவரும் வடகொரியாவில் இன்டர்நெட், சமூக வலைதளங்கள் என எதுவும் கிடையாது. கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய குறைவான டிவி சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கி வருகின்றன. இதனால், சீனா மற்றும் தென்...
Loading posts...
All posts loaded
No more posts
