Ad Widget

காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியாகின!

இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவினால் இதுகுறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.15 அளவிலான நிலைவரத்தின் படி காற்றின் தரச்சுடெண்,

நீர்கொழும்பு – 144, கண்டி – 136, கம்பஹா 127, கொழும்பு – 122, யாழ்ப்பாணம் 119, அம்பலாந்தோட்டை – 117, தம்புள்ளை – 88, இரத்தினபுரி – 70, நுவரெலியா – 53 ஆக காணப்படுகின்றது.

101 முதல் 150 வரையிலான தரத்தினை கொண்ட காற்று, சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை எனவும், 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts