- Saturday
- May 3rd, 2025

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்து கொள்வனவு இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்குள் நிறைவு பெற்றிருப்பது அவசியம். எனினும் சுகாதார அமைச்சு இது குறித்து ஆர்வம் செலுத்தாமையினால் அடுத்த வருடம் பொதுமக்கள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள வேண்டியேற்படலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரித்துள்ளார். மருந்துதட்டுபாடுத்...

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கப் பிரதேசமானது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி தொடர்ச்சியாக பயணம் செய்து அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வட பகுதியை அண்மித்தாக தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ் பொதுசன நூலக முன்றலில் காலை 10.30 மணியளவில் இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவருடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காரணவாய் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறந்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி ஒன்றில் இருந்தே சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு மாணவர்கள்...

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் நினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்புக்கு சென்ற சமயம் , சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில் , கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு வைத்தியர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து...

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை நாளை (11)அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாதன் திட்டம் பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் 14 ஆவது வயதுடைய மகன் அதிக மது போதையில் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக குறித்த மகன் மீட்டதாக ஆரம்ப விசரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 14 வயதுடைய சிறுவன் விசாரணைக்காக தர்மபுரம்...

வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதேவேளை தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை...

சுழிபுரம் சந்தியில் பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி இன்று (05) காலை உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, 17 வயதான முருகசோதி சிறி பானுசன் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வர மீனவர்கள் இன்று (05) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று (04) காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். செப்டெம்பர் மாதம்...

பிலிப்பைன்சில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவிஅறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர். சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன்...

மறு அறிவித்தல் வரை எந்தவொரு கலால் உரிமத்தையும் வழங்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலால் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று அது...

வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன் மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ரஷ்ய தூதரகம் அவர்களின் மகஜரை பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படையில் வலுக்கட்டாயமாகச்...

நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால் குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு நெடுந்தீவுக்கு கொண்டு சேர்த்துள்ளது. நேற்று (02) மாலை 4.00 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து புறப்பட தயாரான வடதாரகை படகு இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதுடன் திருத்த வேலையினை முடித்து பயணத்தை தொடராலாம் என தெரிவித்திருந்த நிலையில் உடனடியாக...

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன அதன்படி நாளை...

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரிடமும்...

All posts loaded
No more posts