- Tuesday
- May 19th, 2026
முப்படையின் நிரந்த படையணிகளின் சிரேஸ்ட அதிகாரிகளின் சேவையை பாராட்டி சிறந்த சேவைக்கான விபூஷண பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (08) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கை இராணவத்தின் தற்போதைய தளபதி லெப்டினட் ஜெனறல் கிரிஷாந்த டி சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்த்ர விஜேகுணரத்ன,...
பாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த ‘ஜாஸ்பா’ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது…. கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் விளம்பரபடம், திரை உலகம் தொடர்பான பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நான் ஒரு போதும்...
வதிவிட சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம சேவகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விஷ்வமடு பிரதேசத்தில் வசிக்ககூடிய நபர் ஒருவரின் உறவினருக்கு அந்த வீட்டில் குடியிருந்து வருவதாக வதிவிட சான்றிதழ் ஒன்றை...
கொழும்பு நகருக்குள் தடையின்றி கள்ளுக்கடைகளை ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதேச செயலாளர் வழங்கியுள்ள அனுமதியை ரத்துசெய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தர்ம ஷக்தி அமைப்பு இந்த மனுவை தாக்கல்செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் மாதம்பாகம அச்சாஜி தேரர் தெரிவித்தார். கொழும்பு நகரில் தற்போது 5 கள்ளுக்கடைகளை நடத்துவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. தற்போது...
உலகில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் சூழல் தொடர்பான சிபிஜே- என்ற ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் இம்முறை அறிக்கையில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு முதலிடத்தில் சோமாலியாவும் இரண்டாவது இடத்தில் இராக்கும் உள்ளன. சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்லப்பட்ட...
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்றொரு பழமொழி உண்டு. இந்த பழமொழி சமூக வலைத்தளங்கள் விஷயத்தில் தற்போது உண்மையாகியிருக்கிறது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை திடீரென்று பலர் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாண நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தமது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ளத் துவங்கினார்கள். அந்த காட்சி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும்...
வடமாகாண விவசாய அமைச்சின் குறித்து ஒதுக்கப்பட்ட நன்கொடை நிதியில் இருந்து 3.3 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உள்ளீடுகளை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்துள்ளார். இப்பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2015) உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட...
விஸ்வமடுவில் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று, மன்னாரில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கை மையமாகக் கொண்டு இயங்கும் 8 பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பான “வான்” இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டை செய்துள்ளது....
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றி அவரது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தால் லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபி,ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசேன் ஆகிய தலைவர்களுக்கு ஏற்பட்டிருந்த நிலையே இன்று அவருக்கும் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வை ரீதியாக அங்கவீனமுற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த சில்வாவினால் ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது. கண்பார்வையற்றவர்கள் பொதுவாக...
சுன்னாகம் பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு மேற்க் கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது பலவேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஏழாலை பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட நான்கு பேரையும்...
மதுபோதையில் பொது மக்களுக்கு இடையூறான வகையில் சந்தியில் நின்று சண்டை பிடித்துக்கொண்டு நின்ற இளைஞர்கள் இருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொடுத்த தர்ம அடியில் இளைஞர்கள் ஓடித்தப்பினர். ஏழாலை வடக்கு, சிவகுரு கடையடியில் நேற்று இரவு சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் மது போதையில் கெட்ட வார்த்தை பிரயோகங்களை பேசி...
வடக்கு மாகாண பொதுச் சேவையின் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வகுப்பு III தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 30.10.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 06.11.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும்
யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று நடைபெற்றது. கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது. குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து...
மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சர்ச்சை நிலை எழுந்திருந்த போது காமத்தரகர்கள் சபைக்குள் இருப்பதாக இரு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது மேற்படி விவகாரம் தொடர்பில் சர்ச்சை எழுந்தது. 200க்கு மேற்பட்ட மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் இது பழிவாங்கல் நடவடிக்கையாகவே இடம்பெற்றிருப்பதாகவும்...
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜாங்ஜியாஜீ பகுதியில் யூண்டா மலைபகுதியில் உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடிப்பாலமானது இரண்டு உயரமான மலை உச்சிகளுக்கு இடையே அரை கிலோ மீட்டர் பகுதியில் 980 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் தரைப்பகுதி கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழேயுள்ள பள்ளத்தாக்கு பகுதியினை பார்வையிட...
2015ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றி கிண்ணத்திற்கான யாழ். மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகின்றது.மைலோ வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு நேற்று யாழில் உள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. மைலோ கிண்ணத்திற்கான ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை ஈகிழ்ஸ் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட லீக்குகலான பருத்தித்துறை,...
அமெரிக்காவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மூன்று இருபது-20 காட்சிப் போட்டிகள் கொண்ட தொடருக்கு சச்சின் டெண்டுல்கரும், ஷேன் வோர்னும் எதிரெதிர் அணிகளுக்கு தலைமை தாங்கவுள்ளனர். கிரிக்கெட் ஓல்-ஸ்டார்ஸ் சீரிஸ் 2015 என இந்தத் தொடர் அழைக்கப்படவுள்ளது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் பேஸ்போல் அரங்குகளிலேயே இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டி நவம்பர் 7ஆம் திகதி நியூயோர்க் சிட்டி...
வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 100 தொண்டர் ஆசிரியர் வடமாகாண சபையின் முன்பாக வியாழக்கிழமை (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பல...
Loading posts...
All posts loaded
No more posts
