- Tuesday
- May 19th, 2026
பல்வேறு கடும் விமர்சனங்களைச் சந்தித்த விஜய்யின் புலி படம் முதல் வாரத்தில் ரூ. 71 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தைத் தயாரித்த எஸ்.கே.டி. நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் - புலி. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் ஈடு கொடுக்காததால் படத்துக்குச்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோணியின் அசத்தலான ஆட்டத்தால் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்து உள்ளது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அடுத்ததாக ஐந்து...
ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டாலோன் தனது இறந்த மகனுக்கு இந்தியாவின் ஹரித்வாரில் இந்து முறைப்படி ஸ்ரார்தம் செய்து திதி அளித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாலிவுட் திரைப்பட உலகில் ஏராளமான ஆக்ஷன் படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன். இவருடைய இளைய மகன் சாகே ஸ்டாலோன். இவரும் ஹாலிவுட் நடிகர் ஆவார்....
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது டெஸ்ட் நேற்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. அந்த அணி சார்பில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர், பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னிலையில் ஆஜரானார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க தொலைக்காட்சி ஒன்றில் விளம்பரங்களை பிரசுரித்தமைக்கு கட்டணம் வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக அண்மையில் பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு...
வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் ஏனைய பகுதிகளிலும், புலம் பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும் வாக்களிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அன்மையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் சிறு பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளை...
வடமாகாண விவசாய அமைச்சால் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக தரிசனம் நிறுவனத்தின் 2..5 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிலக்கடலை சேமிப்புக் களஞ்சியத்தை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (13.10.2015) திறந்து வைத்துள்ளார். இலங்கையில் நிலக்கடலை உற்பத்தியில் மொனராகலை மாவட்டத்துக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு மாவட்டமே உள்ளது....
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை) தமிழ்த்...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் சங்கத்தின் வன்னிப்பிராந்தியக்கிளை ஒன்று இன்று (14.10.2015) கல்லுாரியின் மூத்த பழைய மாணவரும் மகாதேவா ஆச்சிரமத்தின் இயக்குனரும் முன்னாள் அரசாங்க அதிபருமான தி.இராஜநாயகத்தின் தலைமையில் கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ஆரம்ப கூட்டத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. அதில் பழைமாணவர்களும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழையமாணவர்சங்க தாய்ச்சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்....
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான ஆரம்பகால அமைதி நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வந்த இந்தியா, போரின் இறுதித் தருணங்களில் இலங்கை இராணுவம் வெற்றியடையும் வாய்ப்பு அதிகரித்தவுடன் விடுதலைப்புலிகளின் அழிவை எதிர்பார்த்துகாத்திருந்ததாக தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்யஹய்ம், புலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்த வில்லை எனக் குறிப்பிட்டார். தென்னிந்தி...
பாகிஸ்தானில் வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு பாதையில் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகரைச் சேர்ந்த 24 வயதடைய ஷஹ்பாஸ் அஹ்மட் என்பவரே இவ்வாறு தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பாதையில் ஓடியுள்ளார். பாகிஸ்தான் அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரிகளினால் அதனைக் கட்ட முடியாமல்...
இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்.சாலை முகாமையாளரின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக இன்று யாழ்.பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமையகத்தால் மூன்று கட்டமான விசாரணைகள் இடம்பெற்றபோதிலும் எந்த விதத்திலும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறாமல் சுயமாக முடிவுகள் எடுத்தல்,ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஒழுங்கீனம்,மதுப்பாவனையுடன் வேலைக்கு...
நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி அதனுடன் இணைந்து, மற்றுமொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்...
தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கனேடிய மத்திய நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பத்துள்ளது.1995ம் ஆண்டு முதல் கனேடிய அரசாங்கம்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...
யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் நண்பகலளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் ஏமி ஜாக்சன் நடிக்க உள்ளதை நினைத்து பல நடிகைகள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்களாம். வெற்றிகரமான இயக்குனராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் ஏங்குகிறார்கள். ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட்டால் அது பெரிய பாக்கியம் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் ஏமி ஜாக்சனுக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
