ரூ.10,000 கொடுப்பனவு 3 கட்டங்களாக அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்படும்

அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஜனவரி மாதமளவில் 2000 ரூபாவை அடிப்படைச் சம்பளத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் ஆற்றும் விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் புதிதாக...

திட்டமிட்ட நேர அட்டவணையின் படி நாளை பரீட்சைகள் இடம்பெறும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பரீட்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்கு அமைய அதனைப் பிற்போட...
Ad Widget

யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவனின் கண்டுபிடிப்பு!

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டிய படி வாய்க்கால் அமைக்க உதவும். கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மாணவன் சிறு வயது முதல் கல்வியிலும் ஏனைய இணைபாட விதான...

தாக்க வரும் கடும் சூறாவளி : 7.5 லட்சம் மக்கள் வெளியேற்றம்

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்க நெருங்கிவரும் கடும் சூறாவளியின் விளைவாக மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியில் வசிக்கும் சுமார் ஏழரை லட்சம் மக்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 'மெலான்' என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளியின் விளைவாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 20 மாகாணங்களில் கடுமையான புயல்காற்றுடன் சுமார் 12...

இண்டர்நெட் இல்லாமல் கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது எப்படி?

அதிவேக நெட் இணைப்பு இல்லாவிட்டால் கூகுள் மேப்ஸ்ஐ பயன்படுத்த முடியாது என்று நீங்கள் நினைத்திருந்தால் அதை மாற்றி கொள்ளுங்கள். தெரியாத ஊரில் வழி தெரியாமல் மாட்டி கொண்டால் எப்படி வெளியே வருவது என்றால் முதலில் நினைவுக்கு வருவது கூகுள் மேப்தான். போனில் இண்டர்நெட் இருந்தால் தப்பிக்கலாம், ஒரு வேளை இண்டர்நெட் இல்லாவிட்டால் என்ன செய்வது என்று...

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை!

கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு...

பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம்?

பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை வழங்கப்படாவிட்டால் பால் மாவின் விலைகளை உயர்த்த நேரிடும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 75 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சங்கம்...

” அருட்­தந்தை பிரான்ஸிஸ் முன்­னி­லையில் சர­ண­டைந்த 10 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு என்ன நடந்­த­து”

யுத்­தத்தின் இறுதி நாட்­களில் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்­பட பொது­மக்கள் பலர் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் மற்றும் கைக்­கு­ழந்­தைகளை தாங்­கிய பத்­துக்கும் மேற்­பட்ட குடும்­பத்­தினர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். எனது கணவர் சுந்­தரம் பர­ம­நா­தனும் இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்­களில் ஒரு­வ­ராவார். தற்­போ­து­வரை அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­துள்­ளது. இரா­ணு­வத்­திடம் நேர­டி­யாகஒப்­ப­டைக்­கப்­பட்ட...

GCE O/L : நாளைய தினத்திற்கான பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை

கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக பல துறைகளின் பணிகள் முடங்கக்கூடும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன்...

கணவர் உயிருடன் இருப்பார் என்று நம்பிக்கையில்லை: நட்டஈடை தாருங்கள்

காணாமல் போன எனது கணவர் தற்போது உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது கணவரின் மரணச்சான்றிதழையும் பெற்றுவிட்டேன். எனவே, எனக்கு நட்டஈடு தாருங்கள் என்று, காணாமல் போன முஹமட் அஜ்மீன் என்பவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். காணாமல் போனார் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறு நாட்கள் அமர்வு, கடந்த வெள்ளிக்கிழமை (11)...

யாழில் பண மோசடி செய்த இந்திய பிரஜைக்கு வலைவீச்சு

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த 8 பேரிடம் 38 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தேடி வருவதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாகவும் வெளிநாடுகளுக்கு செல்லவிரும்புவேரை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி இந்திய பிரஜையொருவர், 8 பேரிடம் இருந்து...

கடத்தியவர்களை ஈபிடிபி அலுவலகத்தில் கண்டேன் – தாயார் சாட்சி

ஆயுதம் ஏந்தியிருந்த நிலையில் தம்மை இராணுவம் என அடையாளப்படுத்தியவர்கள் இரவு நேரத்தில் என் வீட்டுக்கு வந்து தூங்கிக்கொண்டிருச்த எனது மகனை இழுத்து சென்றதுடன் மறுநாள் காலை மூன்று பேர் எனது வீட்டுக்கு வந்து தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர். அந்த மூன்று பேரையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகத்தில் கண்டேன்' என, தாயாரான முத்துலிங்கம்...

இராணுவத்தினருக்கு எதிராக அதிக முறைப்பாடுகள்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வில் நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் சாட்சியமளித்தவர்களில் அதிகமானவர்கள், இராணுவமே தங்கள் உறவுகள் காணாமற் போவதற்கு காரணம் என சாட்சியமளித்துள்ளனர். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட 235 பேர் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஒரே நேரத்தில்...

பொதுச்சேவைகளை முடக்குவோம்: அரசாங்கத்துக்கு சிவப்பு சமிக்ஞை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று 14ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதலும், நாளை 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளன. மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து பஸ் நிறுவனங்களில் 17 நிறுவனங்கள், இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து சங்க...

வடக்கில்தான் ஊடகர்கள் பலர் கொல்லப்பட்டனர்! – பிரதமர் ரணில்

"கடந்த காலத்தில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். வடக்கில்தான் பெரும்பாலான ஊடகர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அந்த யுகத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம்."- இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை, நாடாளுமன்ற விவாதம் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில்...

வடக்கிற்கு நேரில் சென்று ஊடகவியலாளர்களின் பிரச்சினைகளை அறிவேன்! – ஊடகத்துறை அமைச்சர்

வட பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...

அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் தோமஸ் சானொன் இன்று (14) இலங்கை வரவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் மான்பிரீத் சிங் ஆனந்தும் வரவுள்ளார் என...

மீனவர் பிரச்சினைக்கு விக்னேஸ்வரன் கூறும் தீர்வு

இந்திய - இலங்கை மீனவர்கள் குறித்து இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கலந்து பேசுவதால் சரியான தீர்வு கிடைக்காது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இரு நாட்டு மீனவ சங்கப் பிரதிநிதிகளும் இது குறித்து கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினை குறித்து இரு நாட்டு அரசியல்...

நியூசிலாந்து 122 ஓட்டங்களால் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் கடந்த 10ம் திகதி ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் முதல்...

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருகிறது

கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும்,...
Loading posts...

All posts loaded

No more posts