- Wednesday
- June 17th, 2026
மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப புதிய கட்சியை உருவாக்க இது சிறந்த சந்தர்ப்பம் என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஆர்.சம்பந்தன் இந்த அரசாங்கம் அமைய ஒத்துழைப்பு வழங்கியவர் என்பதால், அவரிடம் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து மக்களின் எதிர்ப்புகள் தொடர்பான கருத்துக்களை பிரதிபலிக்க முடியாது எனவும்...
நாட்டில் இருக்கும் பிற்போக்கு சக்திகளுக்கு இடம்கொடுத்து அரசாங்கம் நல்லதொரு செயல்முறைக்கு முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது, அதனை முழுமையாக செய்து முடிக்க வேண்டும் என, வலியுறுத்துவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். "அரசியல் தீர்வு சம்பந்தமான எங்களது நிலைப்பாட்டை 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நாங்கள் முன்வைக்கையில், மக்கள் இதனை...
திருகோணமலை மாவட்டம் சம்பூரில் ஆறு வயது சிறுவனொருவனின் மர்ம மரணம் அந்தப் பகுதியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோருடன் மீளக் குடியேறியிருந்த குகதாஸ் தர்சன் என்ற சிறுவனே இவ்வாறு மர்ம மரணமடைந்துள்ளான். இந்தச் சிறுவனின் சடலம் கல்லோடு கட்டப்பட்ட நிலையில் இன்று...
இலங்கை மக்கள் எப்போதும் எமது மனதிலும் இடம் பிடித்தவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கான உதவிகளையும் செயற்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் . அதனால் இலங்கை நாடு எமக்கு அயல் நாடாக தெரியவில்லை. இது எங்களுடைய வீடாகக் காணப் படுகின்றது என யாழ் இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஐன் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்திய நாட்டின் 67 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று...
ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் உடல் பருமனாதலை குறைப்பதற்கான முக்கியத்துவம் குறித்த அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் இந்த பரிந்துரைகளை முன்...
காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டுக்காலத்தை இன்னும் 12 மாதங்களினால் அரசாங்கம் நீடித்தால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளுக்கு நாங்கள் நிச்சயம் தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம். அதற்கேற்றவகையில் தேவையான திட்டங்கள் எம்மிடம் உள்ளன என்று ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். நாங்கள் திருகோணமலையில் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும்...
ஊழியர்கள் மற்றம் தொழிலாளர்கள் மத்தியில் தமது உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் Salary.lk இணையத்தளத்தில் இலங்கையின் ஊழியர் சட்ட விதிமுறைகள் பற்றிய விவரங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கியுள்ளதாக சர்வதேச தொழில் ஸ்தாபனம் (ILO) அறிவித்துள்ளது. இலங்கையின் தொழிலாளர் சட்ட விதிமுறைகள் பற்றிய தெளிவான விவரங்களை இந்த இணையத்தளம்...
நாட்டில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது உணவு நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாக சனத்தொகை புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரக்கறி, பச்சை மிளகாய், மீன், அரசி, யோகட், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, முட்டை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. எவ்வாறெனினும், பெரிய...
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் செயற்திட்டமொன்றை நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 36 சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டிருந்தார்.
அனிருத் சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே விஜய்-அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார். ஆனால், சமீபத்தில் இவர் பீப் பாடல் விவகாரத்தில் சிக்கியது இவருடைய மார்க்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் பல படங்களில் இருந்து அனிருத் வெளியேற்றப்பட்டார். நேற்று நடந்த விருது விழா ஒன்றில் மாரி படத்திற்காக அனிருத்திற்கு சிறந்த...
சிவகார்த்திகேயன் இன்று விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார். இவரின் வளர்ச்சி குறித்து நாங்கள் கூற தேவையில்லை, தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிவார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவரின் ரஜினிமுருகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தற்போது தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். இதில் இவர் கூறுகையில் ‘ஒவ்வொரு...
யாழ் திரைப்படத்தின் பாடல்களும் ஈழத்தமிழிலேயே இருப்பது மற்றும் ஒரு சிறப்பம்சம்.இதுவரை தமிழ் சினிமாவில் பல ஈழத்து பதிவுகளை படமாக்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு கமர்ஷியல் அம்சமும் இல்லாமல் மனதில் பட்டதை மிக நேர்மையாக யாழ் படத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் எம்.எஸ். ஆனந்த்.நந்தா படத்தில் நம்மை எல்லாம் நடிப்பால் மிரட்டிய வினோத் கிஷன் கதாநாயகனாக...
அச்சுவேலி நவக்கிரிப் பகுதியில், கடந்த 23ஆம் திகதி அதிகாலை, நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு, 1.5 சதமமீற்றர் அகலத்துக்கு விகாரமடைந்துள்ளது. மேலும், புதிதாக சில இடங்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெடிப்பு ஏற்பட்ட பகுதி சற்றுக் கீழிறங்கியுள்ளது. இந்த வெடிப்பு சுண்ணாம்புப் பாறைகளின் விரிசல்கள் காரணமாக ஏற்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் ஏற்படவில்லையெனவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் யாழ் பல்கலைக்கழக...
ஈழத்தின் பிரபலமான பொப்பிசைப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியரும் பிரபல கால்பந்தாட்ட மத்தியஸ்தருமான எம்.எஸ் கமலநாதன், நேற்று (25) திங்கட்கிழமை வடமராட்சி, வதிரியில் காலமானார். புகழ்பெற்ற பல பாடல்களை எழுதி, இசையமைத்த கமலநாதன், பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் மிகவும் பிரபல்யமாயிருந்ததும் குறிப்படத்தக்கது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பாடசாலைப்...
ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஷ்டி அரசமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் லண்டனுக்கு நேற்று திங்கட்கிழமை காலை பயணமாகியுள்ளார். நாட்டில் புதிய அரசமைப்புத் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் புதிய அரசமைப்புக்கு முன்வைப்பதற்கான யோசனைகளைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு நிலையில்,...
இந்தியாவின் தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளது போன்று, கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கும் வகையில் இலங்கையின் தண்டனைச் சட்ட நடவடிக்கைக் கோவையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த முருகேசு சத்தியநாதன் என்பவரை உலக்கையால்...
தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 8.45 மணியளவில் உடல்நல மேம்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் தேகாரோக்கியத்தினை மேம்படுத்தல் தொடர்பில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களினால் உரையாற்றப்பட்டதனைத் தொடர்ந்து பழைய பூங்காவில் மாவட்ட செயலக...
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் கிரிக்கெட் பயிற்சி முகாம் மற்றும் பட்டறை யாழ். மத்திய கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய விளையாட்டு சுதந்திர விளையாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆளுமை விருத்திக்கான அறிவுரைகள், விளையாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்தல் மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த...
ஒமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போலியான விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் ஒமானில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது....
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணி தொடக்கம் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணாமல்...
Loading posts...
All posts loaded
No more posts
