Ad Widget

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மாணவர்கள் கோரிக்கை

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் இனங்கண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும்...

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண...
Ad Widget

வித்தியா படுகொலை வழக்கு: விசேட நீதிமன்று ஊடாக விசாரிக்கப்பட்டு விரைவில் தீர்ப்பு! – ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்கொடுமைக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றில் நிறுத்தி, குற்றவாளிகளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு யாழ்.வேம்படி உயர்தரப் பாடசாலையில் வைத்து உறுதியளித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் தீடீர் பயணமாக ஜனாதிபதி...

மூன்றாவது தடவையாக யாழ்.வருகிறார் மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை வருகை தரவுள்ளார். வடமாகாண ஆளுநர் பளிஹக்கார பலாலியில் வைத்து ஜனாதிபதியை வரவேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் ஜனாதிபதி வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார். மேலும் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும்,நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நிலமைகளை ஆராய்வதற்காகவுமே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என...