Ad Widget

செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம்; வடக்கு தொடர்பில் விழிப்பாக இருங்கள்! – மஹிந்த

"செந்தூரனின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. எனவே, இது தற்கொலையா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்கவேண்டும்'' என்று அரசிடம் வலியுறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கில் இடம்பெற்ற செயற்பாடுகள் குறித்து அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். தடுப்பிலுள்ள கைதிகள் குறித்து...

செந்தூரனின் கடிதத்தினை பிரதி எடுத்த இளைஞர் கைது!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட செந்தூரனினால் எழுதப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கடிதத்தின் பிரதிகளை அச்சிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பாலேந்திரன் பிரசாத் என்ற இளைஞரே நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த (26) யாழ்....
Ad Widget

செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் சிந்த அக்கியுடன் சங்கமமானது. மாணவன் செந்தூரனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்ததுடன், பெருந்திரளான மக்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...

மாணவனின் மரணம் வீணாக மாறிவிடக்கூடாது! – முதலமைச்சர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு முதல்வரைச் சந்தித்த ஊடகவியலாளர்கள் மாணவனின் தற்கொலை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர்...

உயிர் துறந்த மாணவனி்ன் கடிதத்தை மறைக்க முயற்சி! – சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தன் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் கடிதத்தை பொலிஸார் உள்ளிட்ட சில தரப்பினர் மூடி மறைக்க முயற்சித்து வருவதாக தாம் சந்தேகிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தின் பிரதிகள் தமக்கும் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், அவ்வாறான ஒரு கடிதம் கிடைக்கவில்லையென...

தமிழ்க்கைதிகளின் விடுதலைக்காய் தனதுயிரை மாய்த்துக் கொண்ட மாணவனின் சம்பவம் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது: – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில் தொடருந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் சுதன்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி நிற்கும்...

மாணவனின் சாவிற்காக கைதிகளை விடுவிக்க முடியாது

மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் அரசு பலவீனமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவையில்லை என பெற்றோலிய மற்றும் கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி...

மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியவர்களே செந்தூரனின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்- கஜேந்திரன்

“தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு” “ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்” என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...

ஆளும்தரப்பும், அரசியல் தலைவர்களும் செந்தூரனின் உயிருக்குப் பதில் சொல்ல வேண்டும்! பொ.ஐங்கரநேசன்

தொடர் ஏமாற்றங்களும், விரக்;திகளும் வஞ்சிப்புகளும் எஞ்சியிருக்கும் எமது இளைய தலைமுறையை மீண்டும் வன்முறைப் பாதையை நோக்கி உந்துகிறது என்பதைச் சகல தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். செந்தூரனின் உயிரிழப்பு தொடர்பாக அவர்விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், வலிகளோடும் துயர்களோடும் வாழ்ந்து வருகின்ற தமிழினம், தன்...

மாணவன் செந்தூரன் தற்கொலை! அனைவரும் அமைதிகாக்க வேண்டியது அவசியம்: சம்பந்தன், மாவை அறிக்கை

பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம். அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம். அவரது இந்த செயல் சகல தரப்பினாலும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய விடயம். அவரது குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்விதமான ஒரு...

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை – கல்வி அமைச்சர்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக  வடமாகாண  கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன்  செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை காரணமாக ஏற்படக்கூடிய நிலைமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை...

தற்கொலை செய்த மாணவனுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை அரசியல் கைதிகள் விடுதலையை வேண்டி பாடசாலை மாணவன் ஒருவன் புகைவண்டி...

தமிழீழத்தைக் கொடு! அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் எனத் தெரிவித்து மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

"தமிழீழ விடுதலையைக் கொடு, ஒளியூட்டு" "ஒரு அரசியல் கைதியேனும் சிறைகளில் இருக்கக்கூடாது அனைவரையும் விடுதலை செய்ய வேணடும்" என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் ரயில் முன்பாகப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அண்மையாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி...