‘திறமைக்கு தொழில்’ தொழிற்சந்தை கொழும்பு மாவட்டச் செயலகத்தில்

‘திறமைக்கு தொழில்’ தொழிற்சந்தை இம்மாதம் 20ஆம் திகதி காலை கொழும்பு மாவட்ட செயலகத்தின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பிரதான கேட்போர்கூடத்தில நடைபெறவுள்ளது. கைத்தொழில் தொடர்பு அமைச்சின் ஆளணி மற்றும் தொழில்வாய்ப்பு திணைக்களத்தின் கீழ் கொழும்பு மாவட்டச் செயலகத்தின் மக்கள் சேவை மத்தியநிலையம் இத்தொழில் சந்தையை... Read more »

அரச பணியில் இணைத்துக்கொள்ளும் வயதெல்லையை 10 வருடத்தால் அதிகரிக்க நடவடிக்கை

அரசாங்க தொழிலில் இணைத்துக்கொள்வதற்கான வயதெல்லையை 10 வருடத்தால் அதிகரிக்க அனுமதி பெறுவதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அண்மையில் ‘கஜசவ் மித்துரோ” அமைப்பின் ஏற்பாட்டில் மதுகம சிபிகே மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்... Read more »

வடக்கு மாகாண பொதுசேவையில் விண்ணப்பம் கோரல்

வடக்கு மாகாண பொதுசேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும் இறுதி திகதி 16/11/2015 இது தொடர்பிலான அறிவித்தலை முழுமையாக பார்வையிடுவதற்கு Read more »

விண்ணப்பங்கள் கோரல்

அரச மொழிகள் திணைக்களத்தில் மொழிப்பெயர்ப்பு அதிகாரிகள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (சிங்களம்/ ஆங்கிலம்- தமிழ்/ ஆங்கிலம்- சிங்களம்/ தமிழ்) ஆகிய மூன்று பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. குறித்த வெற்றிடங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.10.2015) வௌியான வர்த்தமானில் வௌியிடப்பட்டுள்ளது. Read more »

வங்கிகளில் பதவி வெற்றிடங்கள்

இலங்கை வங்கியில் கீழ்வரும் விளம்பரத்தில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 26.10.2015. முழுமையான விபரங்களை விளம்பரத்தில் பார்க்கவும். சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவி தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் உதவியாளர் பதவிக்கு தகைமையுடையோரிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்ப முடிவுத் திகதி 23.10.2015.... Read more »

 மீன்பிடி தொழிலுக்கு விண்ணப்பம் கோரல்

தென்கொரியாவில், கடற்றொழில் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை பிரஜைகளிடம் நடத்தப்படும் மொழி தேர்ச்சிப் பரீட்சைகான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள், தங்கல்ல, காலி, மாத்தறை ,சீதுவை மற்றும் திருகோணமலை ஆகிய பயிற்சி 19 மற்றும் 20... Read more »

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப பிரிவின் சேவை பதவிகளுக்கு ஆட்சேர்த்தலுக்காக தகைமை பெற்ற இலங்கைப் பிரஜைகளிடமிருந்துவிண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதிக்கு 18 வயதுக்கு குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவரா கவும் இருத்தல் வேண்டும். கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்... Read more »

போதனாசிரியர்களிற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தொழில்பயிற்சிநிலையங்களுக்கு பின்வரும் கற்கை நெறிகளை கற்பிக்கும் போதனாசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றது. சமையற்கலை, வெதுப்பாளர், அறை ஒழுங்குபடுத்துநர், மின்மோட்பர் மீள்முறுக்குநர்(வைண்டிங்), உணவுப் பரிசாரகர்,நீர்க்குழாய்பொருத்துநர் (பிளம்பிங்), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர்,முன்பள்ளி ஆசிரியர் அழகுக்கலை வல்லுனர், பெண்கள்... Read more »

விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வடக்கு மாகாண பொதுச் சேவையின் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர் வகுப்பு III தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 30.10.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும் Read more »

ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் இலங்கை ஆசிரியர் சேவையின் 3ம் வகுப்பு பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 06.11.2015 ஆகும் இது தொடர்பான அறிவித்தலை பார்வையிடுவதற்கு இங்கு அழுத்தவும் Read more »

பொலிஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ம் திகதி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறும் யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு. கே. ஜயலத் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை... Read more »

மருந்தாளர்களுக்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மருந்தகங்களில் பணியாற்றுவதற்கு மருந்தாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மருந்தகங்களை கொண்டு நடத்துவதற்கு, மருந்தக உரிமையாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றன. இலங்கையில் சுமார் 30 ஆயிரம் மருந்தகங்கள் இருக்கின்றபோதும், பதிவு செய்யப்பட்ட மருந்தாளர்கள் என சுமார் 7 ஆயிரம் பேர் மாத்திரமே காணப்படுகின்றனர். மருந்தாளர்கள்... Read more »

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பாக பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தில் 2012 மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பில் எதிர்வரும் 9,10ஆம் திகதிகளில் நேர்முகப்பரீட்சை இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்தல் விடுத்திருக்கின்றமை யாவரும் அறிந்த ஒன்றே. மேற்படி நேர்முகத்தேர்வுக்கு ஏற்கனவே... Read more »

வெற்றிடங்களை நிரப்ப யாழில் நேர்முகத்தேர்வு

முன்னணி தனியார் நிறுவனம் ஒன்றில் 500 வரையான வெற்றிடங்களுக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு பொது மக்கள் தொழில் சேவை நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பொதுமக்கள் தொழில் சேவை நிலையமானது தொழிலுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக... Read more »

31.03.2012 ற்கு முன்னர் பட்டம் பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு கொழும்பில்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் செயலணிக்குழுவினருக்கும் வடமாகாண சபைச் செயலணிக் குழுவினருக்குமிடையே நேற்றயதினம் காலை 11.00 மணிக்கு வடமாகாண சபையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் 15... Read more »

ஆசிரியர் வெற்றிடங்களை வருட இறுதிக்குள் நிரப்ப நடவடிக்கை!

நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் சகல ஆசிரியர் வெற்றிடங்களையும் இவ்வருட முடிவிற்குள் நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு விடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்ஹ தெரிவித்துள்ளார். கிராமப்புற கஷ்டப் பிரதேச பாடசாலைகளிலேயே அதிகளவான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், கணிதம்,... Read more »

5500 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நியமனம்

அரச சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அரச துறையில் தொழில்வாய்ப்பு கிடைக்காதவர்கள் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு அமைய, இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே, கடந்த காலத்தில் விண்ணப்பித்து... Read more »