பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து கேன் வில்லியம்சனின் சதத்தால் 242 ரன்கள் சேர்த்தது. பின்னர் 243 ரன்கள் எடுத்தால்...

ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட 17 வீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அணித் தலைவர் மெத்தியூஸ், தினேஸ் சந்திமால், ரங்கன ஹேரத், குஷல் ஜனித் பெரேரா மற்றும் லகிரு திரிமானே உள்ளிட்ட வீரர்களே இவ்வாறு இணக்கம் தெரிவித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முன்னதாக குறித்த ஒப்பந்தத்தில் அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள்...
Ad Widget

யாழ். மாணவனின் புதிய சாதனை! பல பதக்கங்களை வென்ற மாணவிகள்

இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது)...

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற 2-வது கேப்டன் டோனி

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. தரம்சாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் டோனி உள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக...

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம்

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற ரீதியில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி 27 விக்கெட்டுக்களைக்...

நியுஸிலாந்து அணியை “வைட் வொஷ்” செய்து வீழ்த்தியது இந்தியா

இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ஓட்டங்களால் வெற்றிபெற்று நியுஸிலாந்து அணியை “வைட் வொஷ்” செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 557 ஓட்டங்களை பெற்றிருந்ததோடு, நியுஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 299 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் 258 முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய...

பிலிப் ஹியூஸின் மரணம்: வேண்டுமென்றே பவுண்சர்கள் வீசப்பட்டனவா?

தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் போது, நியூ சௌத் வேல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஷோன் அபொட் வீசிய பந்து, தலையில் தாக்கி உயிரிழந்த துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹியூஸின் மரணம் தொடர்பான, மருத்துவ இறப்பு ஆய்வறிக்கைக்கான விசாரணைகள் நேற்று ஆரம்பித்தன. 2014ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி தலையில் பந்தால் தாக்கப்பட்ட ஹியூஸ், 27ஆம்...

புதிய உலக சாதனை படைத்துள்ள இலங்கை இளைஞன்

ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ் சாதனை படைப்பதே கொழும்பு துறைமுகத்தில் பணிப்புரியும் இந்த இளைஞரின் எதிர்பார்ப்பாகும். கொழும்பு முகத்துவாரம் துறைமுக பகுதியில் உள்ள மகாவலி பயிற்சி...

சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பியனானது யாழ். மத்திய கல்லூரி அணி!

யாழ் மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கம் 17 வயதுக்குட்பட்ட பாடசாலைகளின் அணிகளுக்கு இடையில் நடத்திய துடுப்பாட்டத் தொடரில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பியனானது யாழ். மத்திய கல்லூரி அணி.

 சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று புதன்கிழமை 17 வயதுக்குட்பட்டோருக்கான இறுதியாட்டம் நடைபெற்றது. யாழ் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சென் பற்றிக்ஸ்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா மீண்டும் சாதனை வெற்றி!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 371...

சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ். மாணவிகள் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது. 24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை...

தெல்லிப்பளை மகாஜன மாணவி சாதனை

42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி புதிய சாதனை படைத்துள்ளார்.42 ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 29 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில், ஜெகதீஸ்வரன் அனித்தா 3.41 மீற்றர் உயரத்தை தாண்டி இலங்கை தேசிய மட்ட சாதனையை முடியறித்துள்ளார்....

யாழில் தேசிய விளையாட்டு விழா நாளை ஆரம்பம்! ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு!!

'சமாதானமும்,சகோதரத்துவமும், நல்லிணக்கமும்' எனும் தொனிப்பொருளில் 42 ஆவது தேசிய விளையாட்டு விழா நாளை வியாழக்கிழமை ( 29) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான தேசிய விழாவினை விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. நாளைய ஆரம்ப...

ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல்

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழக்கிழமை (22)அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

500வது டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கான்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 318 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 65, புஜாரா 62, ஜடேஜா 42...

ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

இன்று காலை கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். மது போதையில் காரை செலுத்தியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொரு கிரிக்கெட் வீரர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டு

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த சந்திப்பு அலரிமாளிகைளில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 17 வருடங்களுக்குப் பிறகு...

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ; ஆரம்பித்து வைத்தார் சங்கா

இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில் நேற்று மாலை மூன்று மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் காப்பாளருமான...

நுவன் குலசேகர பிணையில் விடுதலை

கடவத்தை - ரன்முத்துகல பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அணி வீரர் நுவன் குலசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனம் மோதியதில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையை அடுத்து அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts