- Tuesday
- June 30th, 2026
'யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட மயிலிட்டி பிரதேசம் தொடர்பில், இராணுவத்தினர் இதுவரையில் தமது எதிர்ப்பினையோ அல்லது காணி விடுவித்தல் தொடர்பான மற்றுப்பினையோ முன்வைக்கவில்லை. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் நான், கடும் சிரத்தையுடன் இருக்கின்றேன். வடக்கு மக்களுக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எந்த மாற்றமும் இல்லை. சிலவேளைகளில் சிறிய தாமதம் ஏற்படலாம்' என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
யாழ். மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது வரையான காலப்பகுதியில் 33,472 குடும்பங்கள் மீள்குடியேற்றியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'இந்தியாவில் இருந்து வருகை தந்த 955 குடும்பங்கள் உள்ளடங்கலாக 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இவ்வாறு 33,472 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், 10,770 குடும்பங்கள் இன்னும்...
தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை மீளக் கையளிக்கமுடியாது எனக் கூறுவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களின் சொந்த நிலங்களை விடுவித்து அவர்களை அவர்களது காணிகளில் குடியமர்த்த மறுக்குமானால் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடுவதுடன், மக்கள் போராட்டத்தை...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணிகளை இழந்த 9 ஆயிரத்து 700 பேர் தொடர்ச்சியாக முகாம்களில் தங்கியிருப்பதாக யாழ்.மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, 6 ஆயிரத்து 581 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அந்த புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினர் பொதுமக்களின் 9 ஆயிரத்து 205 குடும்பங்களின் 6...
போரினால் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நீண்ட காலமாக தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடர்பில் ஆராய்ந்து உரிய சிபாரிசுகளை முன்வைக்கும் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து தெற்குக்கு இடம்பெயர்ந்த...
பலாலி வடக்கில் மீளக்குடியமர பதிவு செய்து காணி இல்லாத 104 குடும்பங்களுக்கு மாவட்ட செயலக காணி பிரிவு ஊடாக தலா 2 பரப்பு காணி நன்கொடையாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. வலி. வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு, கடந்த டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது....
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் இங்கு வைத்து வழங்கும் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எவ்வித மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டினார். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற போது, இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு அவர்...
வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து 400 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் வழங்குவதற்கு இராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை உயர் அரச அதிகாரி ஒருவர் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள 400 ஏக்கர் காணிகள் இன்னும் சில வாரங்களில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன...
வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீடுகள் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானவையாக அமையும் என்று பேராதனை பல்கலைகழகம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மீள்குடியேற்றத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. உலோகங்களினால் அமைக்கப்படும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீடுகள்...
வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரையில் நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படவில்லை என சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு...
நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீட்டைடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி - சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும் இதுதான் எமது நிலை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். யுத்தப் பாதிப்புக்களால் மீளமுடியாமல் தவிக்கும் தமக்கு இயற்கையும் இடையூறு விளைவிப்பதாக...
வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம்...
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்...
ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர். பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்....
காங்கேசன்துறை வீதி – மாவிட்டபுரக் கந்தசாமிக் கோவிலுக்கருகில் உள்ள இராணுவச் சோதனைச்சாவடி அங்கிருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவுள்ளது. இதனால் மங்கள் எந்தவொரு கெடுபிடிகளும் இன்றி காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வலி வடக்கு பாதுகாப்பு வலயலத்தின் இந்தச் சோதனைச்சாவடியானது, காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றின் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில்...
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றபோதிலும் அதை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்போம் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் நிலைவரம் தொடர்பில் டக்ளஸ் தேவாந்தன்...
சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வலி வடக்கு நடேஷ்வரா இந்துக் கல்லூரிக்குச் செல்ல இன்னும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருவதாகவும், குறித்த பாடசாலைக்கு செல்ல வேண்டுமாயின் பாடசாலையின் அதிபருடன் வாருங்கள் என இராணுவத்தினர் கோருவதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்றத் தலைவர் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மே...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கில் அமைந்துள்ள தனது காணியை துப்புரவு செய்த வயோதிப பெண், அதிகரித்த வெப்பநிலையால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. பலாலி தெற்கைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான பற்றிக் பெர்ணான்டோ றீற்றம்மா (வயது 75) என்ற வயோதிப பெண் இவ்வாறு உயிரிழந்தார். காணி...
கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாதிரி பொருத்து வீடுகள் போன்ற, வீட்டுத் திட்டத்தைப் பெறுவதற்கு வடக்கிலுள்ள மக்கள் முண்டியடிப்பதாகத் தெரிவித்துள்ளார் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன். “மாதிரி வீடுகளைப் பார்வையிட்ட பின்னர், யாழ்ப்பாண மாவட்டத்தில், இந்த வீடுகளைப் பெறுவதற்கு, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதுபோன்று வவுனியா மாவட்டத்திலும், 8,500...
Loading posts...
All posts loaded
No more posts
