- Monday
- June 15th, 2026
0 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணப் பட்டியலை அனுப்புவது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் இலங்கை மின்சாரசபை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதன் பின்னரே மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது. 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு கட்டணத்தை அனுப்புவது குறித்து ஊடகங்களில்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைவான மதிப்பெண்கள் பெற்றமை குறித்து, பெற்றோர் கண்டித்ததால் மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அராலி கிழக்கினைச் சேர்ந்த 17 வயதான மாணவியே நேற்றிரவு தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். இந்நிலையில் பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்கான, தலா ரூ. 50 இலட்சம் பெறுமதியான 25,000 சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த 25,000 வீட்டுத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக ஏற்கப்பட்டு வருகிறது....
தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
உலங்கு வானூர்தியொன்றை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று முன்தினம் (4) நெடுந்தீவுக்கு விஜயம் செய்து பார்வையிட்டு திரும்பியுள்ளனர். நெடுந்தீவில் உள்ள தனியார் சுற்றுலாத்துறை நிறுவனமொன்றின் ஏற்பாட்டிலேயே குறித்த சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இதேபோன்று தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள் உலங்கு வானூர்தியில் வருகைதரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவின் சுற்றுலாத் துறையின் இது முதன்மையாக ஒரு...
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்னதினம் (04) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது. மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார். இந்நிலையில் குறித்த நபர் மதுபோதையில் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு...
அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால், நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில் பெருமளவானோர் 25 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு செல்வதற்காக, இளையோர் பலர் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு பரிசோதனைகளை...
கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர முகாமைத்துவம் தொடர்பான பணிப்பாளர் சமன் ரூபசிங்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 525 பாடசாலைகளில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும், தொழிற்பயிற்சி நிலையத்தினால் வர்த்தமானி...
யாழில் ஆசிரியையின் தாக்குதலுக்கு இலக்கான 4 ஆம் தர மாணவனின் நகம் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் அப்பியாச கொப்பியில் ஒழுங்காக எழுதவில்லை என ஆசிரியை, மாணவனின் கையில் அடித்துள்ள நிலையிலேயே மாணவனின் விரல்...
பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்தார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று...
யாழில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்” யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2 ஆயிரத்து 203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக யாழ்...
வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 520 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மிகவும் பலமிக்க மிக்ஜாம் சூறாவளியானது வட திசையினூடாக நகர்கின்றது. இந்த சூறாவளியானது இன்று காலை சுமார் 11.30 மணியளவில் இந்தியாவின் தென் ஆந்திரப் பிரதேசத்தை ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இது...
வடக்கில் மாவீரர் நிகழ்வில் சிறுவர்களுக்கு போராளிகளை போல் ஆடையணிந்து ,அவர்களின் கழுத்தில் சைனைட் குப்பிகளை அணிந்தமை முற்றிலும் வெறுத்தக்கத்ததொரு செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதை இனியாவது தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் விளையாட்டுத்துறை, இளைஞர்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது. நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி...
யாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூவர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்...
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட...
தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர்...
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து, கிணற்றினை இறைத்த போது கிணற்றினுள் இருந்து பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்கப்பட்டுள்ளன. அது...
மிக்ஜம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து மேலும் கூறுகையில், மிக்ஜம் சூறாவளியானது மேலும் தீவிரமைவதுடன் வடமேற்குத் திசையை நோக்கி இலங்கையிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று இந்தியாவின் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts
