- Sunday
- August 10th, 2025

வடமராட்சியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நீச்சல் போட்டியொன்றில் 40 வயதான பெண்ணொருவர் வெற்றிவாகை சூடியுள்ளார். வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. பருத்தித்துறை- தென்னியம்மன்முனையில் இருந்து இன்பசிட்டி வரை குறித்த நீச்சல் போட்டியானது இடம்பெற்றிருந்தது. இப்போட்டியில் முதலாம் ,...

வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டி வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா வலய மட்ட விளையாட்டு போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது....

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 2 மாணவர்கள் பாதுகாப்பற்ற நீர் நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) விளையாட்டு போட்டிக்காக வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில்,இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என்றும் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மேலதிக விசாரணைகளை...

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வ பணிகளுக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு இதுவரை கிடைக்கப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் 21.8.2023 அன்று திட்டமிடப்பட்டிருந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (17) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன்...

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம்(18.08.2023)பொங்கல் வழிபாடு முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு சிங்கள் மக்கள்,பெளத்த பிக்குகள் மற்றும் சில அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் நீதிமன்ற அனுமதியுடன் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டுக்கான ஆயத்தங்கள் செய்யப்படும் நிலையில் நேற்றையதினமே (17) குறித்த பகுதிக்கு...

காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர். ஆனாலும் குறித்த பகுதி இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை. அதனால்...

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து...

கர்ப்பப்பை குழாயில் கரு தங்கியதில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த, மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியின் ஆசிரியையான அனுசன் துளசி (வயது 30) என்பவரே புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளார். திடீர் வயிற்று வலியினால் துடித்த அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது , அவர் ஏற்கனவே...

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவித்து நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். கடந்த 11 ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும்...

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை ( 18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்வு தொடர்பில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற...

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை பேற்றிற்காக...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவள திணைக்களம் ,மகாவலி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வினைப்...

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி ஓகஸ்ட் 28ம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும்...

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் கருத்துத் தெரிவிக்கையில் ”எமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி செயலிழந்துள்ளமையினால் தண்ணீர் வசதியின்றித் தவித்து வருவதாகவும், இதனையடுத்து சிறிய ரக...

பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலை பொங்கலை குழப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள...

கிளிநொச்சியில் பதிநான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 30 வயதுடைய நபருக்கு பத்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட மற்றுமொரு 18 வயதுடைய இளைஞனுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் 14 வயதுடைய சிறுமி...

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய நேற்று (10) தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் இன்று சம்பவ இடத்திற்கு...

ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நேற்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை வழங்கி வைத்த நிலையில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையினரால் யாழ் இசைக்கருவி நினைவு...

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் அதன் அதிகபட்ச கொள்ளளவை மின்சாரத்திற்கு பயன்படுத்தினால் அதன் உற்பத்தி திறன் 30 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் மட்ட உயரம் கடல் மட்டத்திலிருந்து 438 மீட்டர் ஆகும். ஆனால் நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளதால், தற்போது நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர்மட்டம்...

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (08) ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த மாணவனின் முகத்தில் ஆசிரியர் கடுமையாகத் தாக்கியுள்ளார் எனவும் இதனால் முகத்தில் கடும் வலி ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில்...

All posts loaded
No more posts