- Monday
- June 15th, 2026
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் அவர் இன்று காலை இரா.சம்பந்தனை கண்டு ஆசிபெற்றுக்கொண்டார். இதேநேரம் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலமானதொரு தமிழ்...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் போது , இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கினங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது. இன்னிலையில் வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137...
முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப்பகுதி மக்களாலும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலராலும் வியாழக்கிழமை (18) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய...
யாழ்ப்பாண வர்த்தக சந்தையை குழப்பும் விதமாக யாழ்.மாநகர சபை செயற்பட்டு வருகிறது, அது தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஆளுநரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கா விடின் அடுத்து வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தையை நடத்த மாட்டோம். என யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் தலைவர் கே. விக்னேஷ் தெரிவித்தார். வர்த்தக சந்தை தொடர்பில்...
யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, இதன்போது...
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டுவருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில நேற்றைய தினம் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி...
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையின் 2 ஆம் பகுதி இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாம் பகுதி வினாத்தாளும் இரத்து...
இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது. “புது டெல்லியில் இருந்து காற்று நீரோட்டங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் இயங்கி வருகிறது....
கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் - மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புணரமைக்குமாறு கோரியே அப்பகுதி மக்கள் இவ்வாறானதொரு கோரிக்கைவினை விடுத்துள்ளனர். அவர்கள் அனுப்பிவைத்துள்ள...
தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக நேற்று (16) இடைக்கால துறை வழிநடத்தல்...
இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் முன்னதாக வௌிப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த 12ம் திகதி அந்த பாடத்தின் இரண்டாம்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை...
சாவகச்சேரி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவர்,தனது தலைமுடியைப் பயன்படுத்தி 1550 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகே இடம்பெற்ற குறித்த சாதனை நிகழ்வில், 60 வயதான திருச்செல்வம் தனது தலைமுடியினைக் கொண்டு 19 நிமிடம் 45 செக்கன்களில் 1500 மீற்றர் தூரம்...
வைத்தியசாலை பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய முப்படையினர் வைத்தியசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 06.30 மணி முதல் சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன....
அடுத்த வாரம் முதல் மீண்டும் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 வீதம் முதல் 18 வீதம் வரை VAT அதிகரிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வரும் காற்று நாடு முழுவதும் கடந்து செல்வதே இதற்குக் காரணமாகும். எனவே,...
உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - அனலை தீவு பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அனலைதீவை சேர்ந்த தர்சன் (வயது 23) எனும் இளைஞன் உழவு இயந்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த...
வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN Number) கட்டாயமாக்குவது ஏப்ரல் வரை தாமதமாகும் என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெப்ரவரி மாத இறுதிக்குள் அடையாள எண் பெப்ரவரி இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று முன்பு முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திலோ அல்லது பிரதேச செயலகத்திலோ அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்...
நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியொருவரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57...
Loading posts...
All posts loaded
No more posts
