உரும்பிராய் பொதுச் சந்தை சுகாதாரமற்ற நிலையில்! உரிய தரப்பினர் கவனம் எடுப்பார்களா?

உரும்பிராய் பொதுச் சந்தையில் சுகாதாரமற்ற நிலை காணப்பட்டு வருவதனால் பொருட்களை நுகர்வதற்கு மக்கள் தயக்கம் காட்டிவருவதாக சந்தைக்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்தையில் இறைச்சிக்கடைகள் மற்றும் மீன் விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் அதன் கழிவுகள் உரிய முறையில்அகற்றப்படாமையினால் சந்தையில் ஒரு பகுதியில் ஏராளமான புழுக்கள் நிறைந்து பார்ப்பதற்கு அருவருக்கத்த வகையில் துர்நாற்றம் வீசிக் காணப்படுகின்றது. மேலும்...

‘வடக்கு மக்களுக்கு என்னிடமே விமோசனம் உண்டு’ : மஹிந்த ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான விமோசனம் தன்னிடமே உள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மே தினக் கூட்டத்தில் தமிழில் உரையாற்றிய மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில், வடக்கு – கிழக்கு மக்கள் விமோசனம் பெற தன்னை நோக்கி வரவேண்டுமென...
Ad Widget

சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்கின்றது: கஜேந்திரன்

கல்வித் துறையில் சிங்களமயமாக்கல் அதிகரித்துச் செல்வதாகவும் வடக்கு – கிழக்கு அரச நிர்வாகங்களிலே சிங்கள மேலாதிக்கம் வளர்ந்து செல்வதாகவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே...

மேதின பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த பொலிஸ் பரிசோதகர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு நேற்ற மாலை சாவகச்சேரியிலுள்ள வார்வனநாதர் சிவன் கோவில் முன்றலில் இடம்பெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக மோட்டர் சைக்கிள் ஊர்திப் பேரணி சென்ற வேளை அங்கு கடமையில் இருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பேரணியில் கலந்து கொண்டவர்களை வீடியோ எடுத்த வண்ணம் காணப்பட்டார்.

யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை : சுரேஸ்

யுத்த நிறைவின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் நடத்திய மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்த போதிலும் வடக்கு மக்களின் எவ்வித பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள...

மஹிந்தவின் கூட்டத்தில் பங்கேற்ற இருவர் மரணம்!

கூட்டு எதிர்க்கட்சியினரின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலிமுகத்திடலில திங்கட்கிழமை இடம்பெற்ற மேதின கூட்டத்தில் பங்கேற்ற இருவரே அதிக வெப்பம் காரணமாக மரணமடைந்துள்ளதாக கொழும்பு தேசியவைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக கடும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளதுடன் பல நோய்களும் பரவிவருவதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசுகின்றன!: கருணா

தமிழ் அரசியல் கட்சிகள் இனவாதம் பேசி நாட்டின் அமைதியை குழப்ப முயற்சிப்பதாகவும் அதனை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்...

குற்றுயிராய் கிடந்த காதல் ஜோடி

நச்சுதிரவம் அருந்திய நிலையில் குற்றுயிராய் காணப்பட்ட காதல் ஜோடி மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை (29) மதியம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த 22,மற்றும் 23 வயதுடைய இளம் ஜோடிகளே இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பகுதியினை சேர்ந்த இந்த ஜோடி யாழ்ப்பாணத்துக்கு சனிக்கிழமை (29)...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினப் பிரகடனம் 2017.05.01 (ஆலையடி வேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானம்)   ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 30/01, 34/01 ஆகியவற்றில் இலங்கையும் பெறுப்பேற்றுக் கொண்ட விடயங்கள் அனைத்தும் முழுமையாகத் துரித கதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக்...

வடக்கும் கிழக்கும் இணைந்தாலேதமிழ் பேசும் சந்ததி காக்கப்படும்

“இந்த நாடு முன்னேற வேண்டுமானால், நிலையானதும் நீதியானதுமான தீர்வு, அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அது, நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையானது. அதன் மூலமே நாடு, அபிவிருத்தி அடையும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். “தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, வடக்கு, கிழக்கு...

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தமது கடமைகளை போறுப்பேற்றுக்கொண்டார். இது தொடர்பாக நேற்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையடுத்து புதிய துணைவேந்தர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும்

தரமுடியாதென்ற மனோபாவத்தில் இருப்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும். தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று எமது போராட்டங்களை அமைதியாக நடத்திச் சென்றால்த்தான் தர முடியாது என்றவர்களின்...

நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி - கெட்டம்பே பகுதியில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் சுதேசவாத சிந்தைனையுடன்,...

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது : ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகள் யுத்தத்தில் மாத்திரம் ஈடுபடவில்லை. கல்வி வளர்ச்சியிலும் கூடுதல் அக்கறை காட்டினார்கள். இதனாலேயே பல்கலைக்கழகம் ஒன்றுக்குரிய கட்டுமானங்களை உருவாக்கும் நோக்கில் அறிவியல் நகரை உருவாக்கி கட்டிட நிர்மாணப் பணிகளையும் முன்னெடுத்திருந்தார்கள். இப்போது அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் இயங்கி வருகிறது. நாங்களும் பண்ணையாளர்களுக்கும், எமது கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் அறிவூட்டும் நோக்கில் பிராந்திய கால்நடை...

வவுனியாவில் அன்னாசி அறுவடையை அமைச்சர் ஐங்கரநேசன் ஆரம்பித்து வைத்தார்

வவுனியாவில் முருகனூரில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் அன்னாசி அறுவடை விழா வயல்விழாவாக கடந்த வெள்ளிக்கிழமை (28.04.2017) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு அன்னாசிப்பழ அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சால் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் அன்னாசிச் செய்கை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. விவசாயத் திணைக்களத்தின்...

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகளை கட்சியில் இணைக்க இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை தமது கட்சி அரசியலில் இணைத்துக் கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சி என கருதப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பு நகரில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் புனர்வாழ்வு , வாழ்வாதாரம்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

நிலவுகின்ற வறட்சியான காலைநிலை காரணமாக மின்சாரத்திற்கான கேள்வி அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிவதாக இலங்கை மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி நாளொன்றுக்கான மின்சார கேள்வி 44 கிகாவோல்ட் மணித்தியாலங்களுக்கும் அதிகமாகும் என்று மின்சார சபை கூறியுள்ளது. இதன்காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன பொதுமக்களிடம் வேண்டுகோள்...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அரசிடம் பகிரங்க வேண்டுகோள்

எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் மனந்திறந்து பேச விரும்புகிறோம். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம் இன்றுடன் (சனிக்கிழமை) 69ஆவது றாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய போராட்டத்தில்...

யாழில் திருட்டு நகைகளில் பங்கு பெற்ற போலீசார் கைது!

திருட்டு நகைகளில் பங்கு பெற்ற யாழ். பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் , நீதிவான் ஒருவருக்கும் பங்கு கேட்டமையால் , பங்கு பிரிப்பில் தகராறு ஏற்பட்டு, காவல்துறையினரிடமே அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பில் தற்போது பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அது தொடர்பிலான தீவிர விசாரணைகளில்...

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டன

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து...
Loading posts...

All posts loaded

No more posts