நான் சிவராம் படுகொலை வழக்கில் சம்பந்தப்படவில்லை: சிவநேசன்

பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் யாழ் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச் செய்தமை, முதலமைச்சருக்கும் மாகாணசபை உறுப்பினருக்கும் இடையில் இருக்கக்கூடிய தனிப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களை பெறுமதியற்றதாக்கியுள்ளது. மாகாணசபை உறுப்பினர்களிடம் பெறப்பட்ட சுயவிவரக் கோவைகளும் அதற்கான பதில்களும்...

மாகாணத் தெரிவுக்குழு விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராவேன்: சத்தியலிங்கம்

மாகாணத் தெரிவுக்குழு என்னை முழுமையாக விசாரணை செய்யாவிடின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நானாகச் சென்று ஆஜராவேன் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மக்கள் தங்கள் வாக்குப்பலத்தினால் தங்களுக்கு சேவை செய்யவே எங்களைத் தெரிவுசெய்துள்ளனர். அவர்களுக்கு பதில்சொல்லவேண்டிய கடப்பாடு எனக்கு...
Ad Widget

மடுவில் யாத்திரிகர்களுக்கிடையில் மோதல்!

மடு திருத்தலத்தில் தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன், மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக...

முள்ளிவாய்க்காலில் குண்டு வெடிப்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதிகளில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தினையடுத்து அப்பகுதி மக்கள் பெரிதும் பதற்றத்திற்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் குறித்த பகுதிகளில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் பல விடுவிக்கப்பட்டிருந்தன. குறித்த காணிகளைத் துப்பரவாக்கும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டிருந்தபோது அக்காணிகளில் இருந்த வெடிபொருட்களே வெடித்துள்ளதாக அப்பகுதி...

கிழக்கில் தமிழ் முதலமைச்சரை உருவாக்க எந்தவொரு தியாகத்தையும் செய்யத் தாயார்: கருணா

கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்க எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராக இருப்பதாக கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஒக்டோபர் முதல்...

உத்தேச அரசியல் யாப்பு இனப் பிரச்சனைக்குரிய தீர்வாகத்தான் அமையும் : எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குரிய தீர்வாகத்தான் வரயிருக்கின்ற உத்தேச அரசியல் யாப்பு வரும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர்...

மயிலிட்டி மக்களுக்கு அவசர அழைப்பு!

இடம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி மக்கள் அனைவரையும் நாளை மறுதினம் திங்கட்கிழமை முற்பகல் 9 மணிக்கு மயிலிட்டி துறைமுக முன்றலில் ஒன்றுகூடி விடுவிக்கப்படாதுள்ள ஏனைய நிலப்பரப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த மயிலிட்டி துறைமுகம் உட்பட அதனை அண்டிய பிரதேசம் சூழவுள்ள...

முஸ்லிம்களை யாழில் குடியேற்றுவதா? இல்லையா? : அமைச்சர் ரிஷாட்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும், மீள்குடியேறத் துடிக்கும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் ஒன்றுக்கொன்று முடிச்சுப்போட்டுக் கொண்டிருப்பதை விடுத்து, முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த மாவட்டத்தின் சகல கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப் பினர்களும், முஸ்லிம்களை அரசியல் முக்கியஸ்தர்களும் உதவ வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். யாழ்.மாவட்ட...

பிழை­யான அத்­தி­வா­ரத்தில் சரி­யான கட்­டடம் காலா­கா­லத்தில் நிறுவப் படலாம் என்று எண்­ணு­வ­து ­ம­ட­மை; வடக்கு முதல்வர் சி.வி

நாங்கள் கோருவதில் எதனையுமே தராது ஒரு தீர்வைப் பெற எத்தனிப்பதே எமது கொழும்புப்பார்வையாகும். எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க கொழும்பின் ஜன்னல், கொழும்புப் பார்வை என்பன ஒருபோதும் உதவாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்­பாணம் மத்­திய கல்­லூ­ரியில் ஆறு­மு­க­நா­வலர் சிலை திறப்பு விழா நேற்று நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே...

மீண்டும் போராட்டத்தில் குதிப்போம்! : பெற்றோலிய தொழிற்சங்கம் எச்சரிக்கை

அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததற்கு முரணான வகையில் எமது பிரச்சினை களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் அசமந்த போக்கினையே முன்னெடுக்கின்றது. எனவே, இந்நிலை நீடித்தால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார். இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க தலைவர் டி.ஜே.ராஜகருணா மேலும் குறிப்பிடுகையில் , எமது பிரச்சினைக்கு தீர்வு...

மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்

மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தவதில் ஆசிரியர்களும்,அதிபர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் தீவக வலய பாடசாலைகளுக்கான E Learning கற்றல் இறுவட்டுக்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ் தீவக வலய அதிபர்கள்,கணித,விஞ்ஞான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் தொடர்ந்து...

வடக்கு முதல்வரை சந்தித்தார் ஆனந்தசங்கரி!

வடமாகாண முதலமைச்சர், தமது கட்சியின் தலமையை ஏற்க வந்தால், அதனை வரவேற்க தயாராக இருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் இல்லத்தில் நேற்றையதினம் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமாகாண முதலமைச்சரை விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதியில்லை....

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 அளவில் தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் யோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா...

மத்திய- மாகாண அரசுகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: வடக்கு ஆளுநர்

நாட்டினதும், மக்களினதும் அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என வட. மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்கள் இலங்கை மக்களுக்கு உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும்....

விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது காலத்தின் தேவை! : சுமந்திரன்

தற்போதைய நிலைமையின் படி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவது நாட்டுக்கும் தமிழர்களுக்கும் இனங்களிடையேயான நல்லிணக்கத்துக்கும் நல்லது என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், நான் தொடர்ச்சியாக...

மின்கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது : பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா

மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என்று மின்சக்தி மற்றும் நிலைபேறான சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார் . கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் மோசடிகள் வெளிப்படைத் தன்மையற்ற கேள்விப் பத்திர முறைமையும் அமுலானதாக அமைச்சர் குற்றம் சாட்டினார். அரசாங்கம்...

வித்தியா கொலையின் சூத்திரதாரி சுவிஸ் குமார் :6 வது சாட்சி தெரிவிப்பு

அரச தரப்பு சாட்சியாக தன்னை மாற்ற குற்றபுலனாய்வு துறை அதிகாரி உதவினால் அவருக்கு தான் 2 கோடி ரூபாய் பணம் வழங்க தயார் என தன்னிடம் சுவிஸ் குமார் தெரிவித்ததாக ஆறாவது சாட்சியான முஹமட் இப்ரான் என்பவர் ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணைகளின் மூன்றாம் நாள் சாட்சி...

யாழ். பல்கலையின் விவசாய, பொறியியல் பீடங்களுக்கான கட்டடம் திறந்துவைப்பு

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரனின் அழைப்பின் பேரில், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இலங்கைக்கான...

முன்னாள் போராளிகள் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன

புனர்வாழ்வு பெற்றவர்கள் என்ற காரணத்தால் தனியார் மற்றும் அரச துறைகளில் தமக்கான வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வகையில், அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்து உரையாற்றிய போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும், புனர்வாழ்வின் பின்னரே...

நாளை முதல் புதிய பேருந்து கட்டணம் அறிமுகம்!

இலங்கை போக்குவரத்து துறையில் புதிய பேருந்து கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார். புதிய பேருந்துக்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணங்கள் காட்சிப்படுத்தப்படவேண்டும் என கூறப்பட்டிருக்கம் அதேவேளை பேருந்து கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடுதழுவிய ரீதியில் பரிசோதனைகள்...
Loading posts...

All posts loaded

No more posts