- Wednesday
- May 20th, 2026
சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் குறித்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு இளைஞசர்கள் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய...
நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான கெ.ஜீ.பி குமுதுனி முன்னாள் கொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன், இற்றைக்கு 05 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்....
ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர்,...
பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகும். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவின் வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என...
அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட இருக்கின்றன. இதேவேளை நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.
ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள்...
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லையை 45ஆக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனர் ரோஹித பொகொல்லாகம ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த விடயங்களை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறியுள்ளார். இது...
ரயில் நிலையங்களில் உள்ள கழிவறைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோரை கைது செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் யாசகம் கேட்போரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கைதுசெய்ய ரயில் நிலைய பாதுகாப்புப்...
மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து அகற்றுவதற்கும், அரசியலிலிருந்து ஒதுக்குவதற்கும் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”மகேஸ்வரனின் குடும்பத்தை இந்த மண்ணிலிருந்து...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் மரபணு பரிசோதனைகள் சந்தேக நபர்களுடன் ஒத்து போகவில்லை என ஜின்டேக் நிறுவனத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் ருவான் இளையபெரு நேற்று ரயலட் பார் முன்னிலையில் சாட்சியம் அளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான...
வட மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகிய அமைச்சுக்களுக்கு நிதி, அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் துணியிலான பைகள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி நெறி இன்று (03) ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பாக பொலிஸார் அவசர அவசரமாக முன்னாள் போராளிகள் மீது குற்றஞ்சுமத்துவது, வடக்கில் திட்டமிட்ட குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சட்டத்தரணி சுகாஸ் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார். அல்லது முன்னாள் போராளிகளை இலக்குவைத்து இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்ற சந்கேதத்தையும் ஏற்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற கோப்பாய் வாள்வெட்டு...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியை தவிர்த்து, ஏனைய பங்காளிக் கட்சிகள் ரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளன. வவுனியா புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள விருந்தினர் விடுதியொன்றில், நேற்று (புதன்கிழமை) இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வடக்கு மாகாண சபையின் சுழற்சி முறையிலான ஆசனம்,...
யாழ். சுன்னாகம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, இன்று காலை மூன்று இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் யாழ். போதனா...
யாழ். கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகத்தின் பேரில், மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த முத்து எனப்படும் யோகராசா சதீஸ் மற்றும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த அருள்சீலன் பிரட்றிக் தினேஸ் ஆகிய இருவமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ அதே போல் யுத்த பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டுவர முப்படையினரும் களத்தில் இறக்கப் படுவார்கள் என பொலிஸ்மா அதிபர் கூறியது தொடர்பில்...
Loading posts...
All posts loaded
No more posts
