- Tuesday
- August 25th, 2026
யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தை அந்நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காப்பற்ற முயல்வதாக தெரிவித்து, ஐ.நா. பொதுச்சபை கட்டத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு குற்றவாளி எனும் தொனிப்பொருளில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (புதன்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெருமளவான புலம்பெயர் அமைப்புக்கள், இலங்கையில் இடம்பெற்ற...
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் ஆபத்தில் உள்ளனர் என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பலர் புனர்வாழ்வுக்கு...
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது பிரச்சினைக்கு இதுவரை அரசாங்கம் எவ்வித தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லையென...
இலங்கை அரசியலில் பெண்களுக்கான சந்தர்ப்பம் உரிய முறையில் வழங்கப்படுவதில்லையென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை செலுத்துபவர்கள்...
நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று (புதன்கிழமை) சந்தித்துள்ளார். இது குறித்து தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சில கருத்துக்களையும் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார். நானும் எனது மனைவி ஜயந்தியும், அமெரிக்க ஜனாதிபதியையும் அவரது...
மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் மூலம் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்ட மூலத்துக்கான வாக்கெடுப்பு நேற்று இரவு 6.30 மணிக்கு நடைபெற...
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடந்த 8 நாட்களாக முன்னெடுத்து வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று ( புதன்கிழமை) இரவு நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூட்டுத் தொழிற்சங்க அமைப்பு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சகலரும் வழமை போன்று சேவைக்கு சமூகம் தருமாறு அவ்வமைப்பு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை. இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது. இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஒக்டோபர் 2015ல் நிறைவேற்றப்பட்டபோது, குறித்த தீர்மானத்திற்கும் ஐக்கிய...
மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக நாளை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் நடாத்தும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் (GMOA) ஆதரவு வழங்கியுள்ளது. அதன்படி, நாளை காலை 08 மணி முதல் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக GMOA அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை...
மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில்...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சம்பவங்கள் அண்மைய காலமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு போதைப்பொருளை எடுத்துச் சென்ற ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைதுசெய்த பொலிஸார், நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரிடம் 170 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக...
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்...
டக்கு மாகாணத்தில் வெளிவரும் உதயன் நாளிதழ் நிறுவனத்திடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். கடந்த காலத்தில் தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசனே தராகி சிவராம் படுகொலையைச் செய்தவர் என உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் விவசாய அமைச்சர் போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர்...
எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லையென இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சானக குணவர்த்தன நேற்று(19) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், இராணுவத்தினரின் உத்தரவுக்கமைய, விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சின்னத்துரை சசிதரன் இராணுவத்தினரிடம் சரணடைந்தார் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சராக இருக்கும் அனந்தி சசிதரன்...
தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்... தியாகி திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும்...
தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கையின் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிரதிவாதிகளாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அந்த மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்....
தெகிவளை மிருகக்காட்சிசாலை வாரத்தில் 3 நாட்கள் இரவு வேளைகளில் திறந்திருக்கும் என்று தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார். வெள்ளி , சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 முதல் 10.00 மணிவரையில் மிருகக்காட்சிசாலையை திறந்துவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரவுவேளைகளில் மிருகக்காட்சி சாலைக்கு வருவோர் பிளாஸ் வைத்து புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக...
சர்வதேச சுற்றுலா தின நிகழ்வு வடமாகாண சுற்றுலாத்துறை அமைச்சினால் எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வினை வடமாகாண முதலமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. வடமாகாண சுற்றுலாதுறையை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச சுற்றுலா தினம் வடமாகாணத்தில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம், வடமாகாணத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
