- Tuesday
- May 19th, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம்...
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் கிளிநொச்சி கிளை, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜ் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ள மலையக சமூகத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கம் என ஒன்றியத்தின் இணைப்பாளர்கள்...
டக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகுவதற்கான எந்த சூழ்நிலையும் தற்போது இல்லையென புதிய கடற்படை தளபதியான வைஸ் அட்மிரால் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். கடற்படை தளபதியாக பதவியேற்ற பின்னர், நேற்று (புதன்கிழமை) முதன்முதலாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து நாடு முழுமையான சமாதானத்தை நோக்கி நகர்ந்து செல்கின்ற நிலையில்,...
நாடு முழுவதும் நிலவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடைவெளிகளை நிரம்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதற்கான நேர்முகப் பரீட்சை மிக விரைவில் நடாத்தப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 1815 பேருக்கான இடைவெளி நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டதாகவும், இதில் ஒரு...
டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம்...
டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளிச் சுற்றுப்புறத்தை துய்மைப்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையினால் உருவாக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகளை மாநகரசபையானது இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. அத்துடன் வைத்தியசாலையை சூழவுள்ள வீதிகளிலும் கழிவு நீர் வாய்க்கால்களிலும் தேங்கியுள்ள குப்பைகளை மாநகரசபையானது அகற்றுவதில்லை எனவும் இது தொடர்பாக தாம் வடமாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யவுள்ளதாகவும்...
வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு, மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில், இன்னும் ஒரு வார காலத்துக்குள் பதலளிப்பதாக, வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு...
“நாம் இருவேறு கடமைகளில் ஈடுபட்டுள்ளோம். கட்சி நலம் கருதி சிபாரிசு செய்வது உங்கள் பொறுப்பு. ஆட்சி நலம் சார்ந்து நடவடிக்கை எடுப்பது முதலமைச்சர் பொறுப்பு. கட்சிகளால் நியமிக்கப்பட்டவர்கள் அல்லாது பிறரை முன்னைய அமைச்சரவையில் உள்ளடக்கியதாக நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். அது வாஸ்தவமே” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர்...
புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பங்கதெனியப் பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இரட்டைத் தலையுடன் கூடிய பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது. இந்த பாம்பு ”இரத்த மாம்பிலை”என்று இனங்காணப்பட்டுள்ளதுடன் ஆறு அடி நீளம் உடையது என தெரிவிக்கப்படுகின்றது. பிடிக்கப்பட்ட இந்த இரட்டைத் தலை பாம்பை தெஹிவளை மிருக காட்சிசாலைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோதே மாவட்ட நீதிவான் நீதிமன்றபதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் மேற்படி...
நடிகர் தனுஷ் நடித்த VIP 2 படத்தில் சிகரட் புகைக்கும் காட்சிகளில் நடித்தமையால், யாழில் அவருக்கு எதிராக கையெழுத்துக்கள் திரட்டப்பட்டுள்ளது. மாரி திரைப்படத்தில் புகைத்தல் காட்சிகளில் நடித்திருந்த நடிகர் தனுஷிற்கு எதிராக உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, தனுஷ் தனது திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என வைத்தியர் அன்புமணி ராம்தாஸ்க்கு...
சமுர்த்தி திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம்...
கேப்பாப்புலவு மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள காணியில் 111 காணியை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அங்குள்ள இராணுவ முகாமினை வேறோரு இடத்தில் அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும்...
தாம் வகிக்கும் போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சை ஆளுனர் நினைத்தால் போல் சுவிகரிக்க முடியாது என வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வேண்டு கோளுக்கமைய அவ்வாறு அமைச்சு பதவியை சுவிகரிக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார். டெனிஸ்வரனை அமைச்சு பதவியில் இருந்து விலக்குவதற்கான அனுமதியை கடிதம் ஒன்றின் மூலம் முதலமைச்சர்...
வடக்கு மாகாணத்தின் மீன்பிடி அமைச்சராக சிவனேசனும், சுகாதார அமைச்சராக வைத்திய கலாநிதி குணசீலனும் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ரெனினோல்ட் குரே முன்னிலையில், இவர்கள் இருவரும் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரனும் உடனிருந்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் அண்மைய காலமாக நீடித்து வந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், அமைச்சரவையில்...
யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 28 ஆம் முதல், 25 நாட்களுக்கு இடம்பெற்றது. இதற்மைய நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பாதுகாப்பு கடமையில் 600 இற்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த...
மொனறாகலையில் கடத்தப்பட்ட இளம் பௌத்த தேரர் ஒருவர், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகில் வீசியெறிப்பட்டுள்ளார். 17 வயது நிரம்பிய குறித்த பிக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மக்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த தேரர் நேற்று முன்தினம் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, காரணம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை. தேரர் ஆடைகள் எதுவுமின்றி கைவிடப்பட்டிருந்த நிலையில்,...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விஞ்ஞான பீடத்தை எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 04ம் திகதி வரை மூட யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்...
இணைய பக்கேஜ்களுக்கு 10% போனஸினை வழங்குவதற்கு அனைத்து தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்களும் தீர்மானித்துள்ளனர். 2017 ஓகஸ்ட் மாதம் 22ம் திகதி இணைய பக்கேஜ்கள் /அட்டைகளுக்கான தொலைத்தொடர்புகளுக்கான வரியானது குறைக்கப்பட்டமையினால் அனைத்து மொபைல் மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10%போனஸ் Dataவினை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.அரசாங்கத்தினால் இணைய பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்புவரியானது அகற்றப்பட்டமையானது...
உரும்பிராய் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் சந்தியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு சென்று இருந்த இளைஞர்கள் அங்கு தகாத வார்த்தை பிரயோகத்தினை மேற்கொண்டு வாக்குவாதப்பட்டுள்ளனர். அதனை அடுத்து சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர் , தொழில் செய்யும் இடத்தில் இவ்வாறான வார்த்தை...
Loading posts...
All posts loaded
No more posts
