தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது குறித்த மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் 4 மாவட்டங்களில் டெங்கு தீவிரம், விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு முஸ்தீபு!

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அதேநேரம், தற்போது யாழ்ப்பாணத்தில் விசேட டெங்குக்...
Ad Widget

காங்கேசன்துறை பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி திறந்து வைப்பு!

காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டுநேற்று திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் நிதிப்பங்களிப்பில் வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோனின் தலைமையிலான கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் சரீர ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா...

வாகனக் கொள்வனவில் ஈடுபடுவோருக்கு விசேட அறிவிப்பு!

வாகனத்தைக் கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் அதன் உரிமையை கொள்வனவாளர் தமக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகனங்களின் உண்மையான பதிவு செய்யப்பட்ட உரிமையாளரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வாகனத்தினைக் கொள்வனவு செய்யும்...

யாழில் உணவருந்திக்கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

உணவருந்திக்கொண்டு இருந்த வேளை விக்கல் ஏற்பட்டத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த 41 வயதான மயில்வாகனம் ஐங்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டில் நேற்று (21) மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென விக்கல் ஏற்பட்டதை அடுத்து , கதிரையில் இருந்து மயங்கி சரிந்துள்ளார். உடனே அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற...

ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று கையளிப்பு!

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர். தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று (22) கையளித்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு கிளிநொச்சி...

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க வேண்டும்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், மேற்படி அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, கடந்த உள்ளூராட்சி வேட்புமனு...

இரா. சம்பந்தனை சந்தித்தார் சிறிதரன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் அவர் இன்று காலை இரா.சம்பந்தனை கண்டு ஆசிபெற்றுக்கொண்டார். இதேநேரம் அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலமானதொரு தமிழ்...

போதை பாவனையினால் இளைஞன் பலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையின் போது , இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார்...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கினங்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது. இன்னிலையில் வாக்கெடுப்பில் 184 வாக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137...

அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க முயற்சி!!

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப்பகுதி மக்களாலும், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலராலும் வியாழக்கிழமை (18) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய...

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையை நடத்தவிடாது தடுக்க யாழ்.மாநகரசபை முயற்சி!!

யாழ்ப்பாண வர்த்தக சந்தையை குழப்பும் விதமாக யாழ்.மாநகர சபை செயற்பட்டு வருகிறது, அது தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஆளுநரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கா விடின் அடுத்து வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தையை நடத்த மாட்டோம். என யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் தலைவர் கே. விக்னேஷ் தெரிவித்தார். வர்த்தக சந்தை தொடர்பில்...

யாழ்.மாவட்டத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!!

யாழ்.மாவட்டத்தில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளைய தினம் முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது, இதன்போது...

போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டம் வெற்றியடைய நல்லூர் முருகனிடம் வேண்டுதல்!!

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டுவருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில நேற்றைய தினம் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி...

பாடசாலை விடுமுறையில் மாற்றம்!

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சையின் 2 ஆம் பகுதி இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாம் பகுதி வினாத்தாளும் இரத்து...

இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்று நாட்டின் சில பகுதிகளில் மூடுபனி போன்று காணப்படும்!!

இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது. “புது டெல்லியில் இருந்து காற்று நீரோட்டங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் இயங்கி வருகிறது....

தங்கள் ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிய மீசாலை மக்கள்!!

கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொடிகாமம் - மீசாலை வடக்கு இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புணரமைக்குமாறு கோரியே அப்பகுதி மக்கள் இவ்வாறானதொரு கோரிக்கைவினை விடுத்துள்ளனர். அவர்கள் அனுப்பிவைத்துள்ள...

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு!!

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான தொழிற்சங்கங்களை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்டமாக நேற்று (16) இடைக்கால துறை வழிநடத்தல்...

A/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் முன்னதாக வௌிப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த 12ம் திகதி அந்த பாடத்தின் இரண்டாம்...

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை...
Loading posts...

All posts loaded

No more posts