- Thursday
- August 27th, 2026
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதுடைய அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். விடுதலைப்புலிகளுக்கு வாகனம் எடுத்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டிருந்தார்....
நேற்று முன்தினம் (15) இரவு வேளையில் கிளிநொச்சி, முரசுமோட்டைப்பகுதியில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க மூன்று ஆலயங்களில் இனம்தெரியாத நபர்களால் பிரதான விக்கிரகங்கள் உடைக்கப்பட்டும் திருடப்பட்டும் உள்ளது. முரசுமோட்டை சிவா சுப்பிரமணியர் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு ஆலயத்தின் மூல விக்கிரகமான வேல் முறிக்கப்பட்டுள்ளதுடன் களஞ்சிய அறையும் சோதனை இடப்பட்டுள்ளது. அத்துடன் முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயக்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி வளைவு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். மற்றய நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (16) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது இச் சம்பவத்தில் அச்சுவேலி பத்தமேனி பகுதியினை சேர்ந்த...
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாத நிலையில் அவசரகாலச்சட்டத்தை மேலும் நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டம் இடம்பெற்றபோதே, கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உள்ளிட்ட...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுமாறு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நிராகரித்துள்ளது. வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) 18ஆவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் பணிப்புறக்கணிப்பை கைவிட்டு, பணிக்கு செல்லுமாறு பல்கலைக்கழக மானியங்கள்...
நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (17) கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்...
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் எதிர்வரும் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது இந் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
ஐ.நா மனிமத உரிமைகள் பேரவையின் 37 வது அமர்வின் {விடயம் 5) இன் கீழ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஐேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஐேந்திரன் ஆற்றிய உரை.. HUMAN RIGHTS COUNCIL Delivered by:- Gajendrakumar Ponnambalam 37th Session ITEM 5 – General Debate Mr. President,...
பேஸ்புக் அல்லது வேறேதும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில், குற்றவியல் தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், தண்டனை வழங்க முடியுமென, சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேற்படிக் குற்றங்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரம், பொலிஸாருக்கு உண்டென, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டீ.சில்வா தெரிவித்தார். அத்துடன், இவ்வாறான...
உள்ளூராட்சி மன்றங்களுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர் விபரம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 11 மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் நேற்று இரவு இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக தலைவர் லியனகே தெரிவித்துள்ளார். ஏனைய மாவட்டங்களில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரம் இன்றைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளது.
பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள யாழ். நடேஸ்வரா கல்லூரியின் கட்டடத்தையும், கிணற்றையும் உடனடியாக விடுவிக்க வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன் யாழில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள்...
வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதைக் கட்டுப்படுத்துமாறு வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பிரதானிகளுடன் வடக்கு முதலமைச்சர் நடத்திய சந்திப்பின் போது இந்த அறிவுறுத்தலை அவர் விடுத்துள்ளார். ஆலயங்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகள் இயக்கப்படுவதால் அவற்றின் சூழலில் வாழும் வயோதிபர்கள் நெஞ்சு அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர்,...
2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன என்று தமிழ்த் தேசிய...
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக் கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக கடமையாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற உபகுழுக்கூட்டத்தில் தெரிவித்தார். “மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. மக்கள் கால்கள், கைகள், கண்கள் இன்றி காயமடைந்த நிலையில்...
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் கேட்கும் திறன் குறையும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புகைப்பிடிக்கும் பழக்கத்தால் இதயம், நுரையீரல் பாதிக்கப்படும் அதேநேரம் கேட்கும் திறனும் பாதிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சுமார் 50 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட,...
துன்னாலை பகுதியில் கசிப்பு உற்பத்தியைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் உடையில் சென்ற பொலிஸார் மீதே கல்வீச்சு மற்றும் பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று (14) மாலை குடவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் மேற்கொண்ட நபர்களை...
யாழ். போதனா வைத்தியசாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி நோயாளிகளின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் (கிளினிக்) அமைக்கப்பட்டுள்ள குறித்த மின் உயர்த்தியை சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் திறந்து வைத்தமை சிறப்பம்சமாகும். இந்நிகழ்வு யாழ். வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலைமையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது....
இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை, முற்றாக நீக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பிரகாரம், இன்று (வியாழக்கிழமை) சமூக ஊடகங்களின் பாவனை வழமைக்குத் திரும்பியுள்ளது. கண்டி மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களும் காணொளிகளும் பகிரப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், வன்முறைகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக...
பேஷ்புக் உட்பட சமூக வலைத்தளங்களே யாழில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என யாழ் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி தெரிவித்துள்ளார். வீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவருக்கு வழங்க என 180 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பற்பசைக்குள் மறைத்து சூட்சுமமாகக் கடத்திச் சென்ற இளம் பெண் மற்றும் இளைஞர் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் சிக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20ஆம்...
Loading posts...
All posts loaded
No more posts
