வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவுக்கு கையளிப்பு: சிவாஜிலிங்கம்

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்ற, வலியுறுத்தி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றயதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சகல கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்...

இடம்பெயர வேண்டிய அச்சத்தில் மன்னார் மக்கள்!

மன்னாரின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடித்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னாரில் நேற்று (புதன்கிழமை) பெய்த அடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்கள்...
Ad Widget

பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை

தனியார் பேருந்து சாரதி ஒருவரை தாக்கி, அச்சுறுத்தியமை தொடர்பில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவருக்கு தலா 1500 ரூபாய் தண்டப்பணமும், தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவரை முன்னிலைப்படுத்தியப்போது நீதவான் சின்னத்துறை சதீஸ்வரன்...

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

இன்று நள்ளிரவு முதல் வட்ஸ் அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்ணாந்தோ கூறியுள்ளார். கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு சமூக சலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி வைபர் (Viber) பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று (13) நள்ளிரவு முதல் நீக்கப்பட்டது....

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த விரைவில் சட்டம்!- பிரதமர்

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலமொன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையை எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது இவ்விடயம் குறித்து கவனம் செலுத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனங்களுக்கிடையிலான...

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடு! – பேஸ்புக் நிறுவனம்

இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக்...

சமூகவலைத்தளங்கள் மீதான தடை: அரச நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு!

ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையானது, இலங்கையின் அரச நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடைக் காலத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன ஒரு தினத்தில் 200 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துவது குறித்த விவாதங்களை...

சுமார் 500 மில். ரூபாயில் சாவகச்சேரி நகரம் அபிவிருத்தி

உலக வங்கியின் சுமார் 500 மில்லியன் ரூபாய் நிதி உதவியில், சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, சாவகச்சேரி நகரசபைச் செயலாளர் க.சண்முகதாசன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உலக வங்கியால் சாவகச்சேரி நகர...

காணமல்போன மீனவர்களை விமானம் மூலம் தேட நடவடிக்கை

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் தொழிலுக்கு சென்ற சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்கள் இதுவரை திரும்பி வராத நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். 12 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் இருந்து மூன்று மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். சிலாபத்தினை சேர்ந்த 51 வயதுடைய மில்ராஜ் மிரண்டா,...

ஆண்மையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் மருந்துகள் இல்லை; உலக சுகாதார நிறுவனம்

அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களை தொடர்ந்து ஆண்மையிழக்கச் செய்யும் மருத்துகள் குறித்த விவகாரம் சர்வதேச சமூகத்தையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அம்பாறையில் முஸ்லிம்களின் உணவகத்தில் ஆண்மையிழக்கச் செய்யும் மருந்து கலந்த உணவு வழங்கப்பட்டதாகக் கூறி சிலர் அந்த உணவகத்தை தாக்கியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துக்கள், பள்ளிவாசல் ஆகியவற்றையும் தாக்கினர். பின்னர் கண்டியில் வேறு ஒரு காரணத்தை காட்டி...

VPN தொழில்நுட்பம்

கண்டியில் கடந்த வாரம் எழுந்த இன ரீதியிலான பிரச்சினைகளின் பின்னணியில், ஒரு கட்டத்தில் கண்டியில் 3G, 4G இணைய சேவையில் மட்டுப்படுத்தலை செய்தது மட்டுமல்லாது நாடுமுழுவதிலும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் ஆகிய வலைப்பின்னல்களை அரசாங்கம் தடை செய்தது. இத்தடையானது சட்ட ரீதியில் தண்டனைக்குரிய குற்றமாக அமையுமாறு இல்லாமல் வெறுமனே அச்சேவைகளை தற்காலிகமாக முடக்குவதற்கான...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை விவகாரங்களுக்கான அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஜெனீவாவில் சந்திப்பு

இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளிடம் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள்...

பேஸ்புக்கில் பொய்ப் பிரச்சாரம் செய்த மாணவன் விளக்கமறியலில்

இனங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வகையில் பேஸ்புக் ஊடாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அண்மையில் குற்ற விசாரணைப் பிரிவினரால் அந்த மாணவன் கைது செய்யப்பட்டிருந்தார். 18 வயதுடைய...

யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை!

கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இன்று பரவலபக பெருமழை மழை பெய்துவருகின்றமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை முதல் யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் அதிக காற்றுடன் மழை பெய்தவருகின்றது. இதனிடையே இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் அது மேலும் வலுவடையுமென...

வளிமண்டலத்தில் மாற்றம் ; மீனவர்களுக்கு எச்சரிக்கை !

அடுத்துவரும் 48 மணித்தியாலங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் கடற்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை, இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயத்தில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம் ஆரம்பம்!

தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில், பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம் துண்டிக்கப்படல், பிரதான வாயிற் கதவுகளை மூடல் ஆகிய எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக...

யாழில். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவருக்கு பிணை!

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவரின் புகைப்பட கருவியை சேதமாக்கி ஊடகவியலாளரை அச்சுறுத்திய இருவரை பிணையில் செல்ல யாழ்.நீதிவான் நிபந்தனை அடிப்படையிலான பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். யாழ்.கொக்குவில் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்ண நிறபூச்சு (பெயின்ட்) விற்பனை நிலையம் ஒன்றின் மீது கடந்த வெள்ளிக்கிழமை இளைஞர் குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டது. குறித்த தாக்குதல் சம்பவம்...

உணவு ஒவ்வாமையினால் 98 பேர் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையினால் 98 பேர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டவர்களே இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (11) காலை தவக்கால வழிபாடு நடைபெற்று வந்த வேளையில் அந்தோனியார் ஆலய நிர்வாகத்தினால் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உணவினை உட்கொண்டவர்கள் மயக்கடைந்து விழந்துள்ளனர்....

யாழ். வங்கி பண மோசடி: கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணத்தில் அரசாங்க வங்கியொன்றுக்கு கொண்டுவரப்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி அநுராதபுரம் பிரதேச வங்கியொன்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றுக்கு கொண்டுச்செல்லப்பட்ட 11,074,000 ரூபாய் பணத்தில் 8,020,000...

பேஸ்புக், வட்ஸ்அப் மீதான தடை: இன்று விஷேட கலந்துரையாடல்

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முடக்கப்பட்டிருந்த பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக வலைதளங்களை மீள செயற்படுத்துவது குறித்து இன்று (திங்கட்கிழமை) விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடலில், அரச அதிகாரிகள், இலங்கை தொலைதொடர்புகள் மற்றும் ஒழுக்காற்று ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பேஸ்புக்,...
Loading posts...

All posts loaded

No more posts